பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 161

“சும்மா நாடகம் ஆடுகிறார்கள், போலீஸ் அதிகாரி கள். ஏதோ சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாகச் சொல் லிக் கொண்டு வட்டங்களையும், கோட்டங்களையும் பாது காப்பதற்காக-நம்முடைய விழாக்களையெல்லாம் நடக்க விடாமல் செய்கிறார்கள். கொந்தளிப்பான நிலைமை களுக்குக் காரணமானவர்களைப் பிடித்துக் கைது செய்து அமைதியைப் பாதுகாக்கத் துப்பில்லாமல் அமைதியாயி ருப்பவர்களைத் துன்புறுத்துகிறார்கள். இதற்கு நாம் அடங்கக்கூடாது. தடை இருந்தால் தடையை மீறிக் கூட்டம் நடக்கும். ஒழுங்காகக் கூட்டத்துக்கு அநுமதி உண்டா அல்லது அநுமதியைப் பெறாமலே கூட்டம் நடக்க வேண்டுமா என்பதைப் போய்க் கேட்டு வா!”

வந்த மாணவனும் அவனோடு திரும்பி வந்த மற்றவர் களும் மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு விரைந்தனர். இதற்குள் நன்றாக இருட்டிவிட்டது. குளிரும் அதிகரித்திருந்தது. மேடை அலங்காரம் முடிந்து மைக் கட்டிக் கூட்டத்தைக் கூட்டு வதற்கான பாடல்களும் ஒலி பெருக்கி களின் மூலம் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. சுமார் ஐயாயிரம், ஆறாயிரம் மாணவர் களும் கூடிவிட்டனர். மேலும், மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் இருந்தனர். அண்ணாச்சி கடை சூறையாடப்பட்ட செய்தி வேறு காட்டுத் தீயைப் போல் பரவியிருந்தது. மாணவர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் கூடிவிட்டார்கள். அந்த நிலையில் கூட்டத் துக்குத் தலைமை தாங்கி நடத்திக் கொடுக்க வேண்டும் என்று பாண்டியனும், மற்ற மாணவர்களும் மணவாளனை வேண்டினார்கள். மணவாளன் மறுத்தார்: “நான் எதற்கு? உங்களிலேயே யாராவது ஒருவர் தலைமை தாங்குவதுதான் நல்லது. இல்லாவிட்டால் ஓர் உண்மை சமூக ஊழியரும் தேசபக்தரும் இன்றைய தினம் வன்முறைக் கும்பலால் பாதிக்கப்பட்ட வருமாகிய அண்ணாச்சியையே தலைவராக வைத்துக் கூட்டத்தை நடத்தலாமே?”

மணவாளன் கூறியது போலவே கூட்டத்துக்குத் தலைமை தாங்குவதற்கு அண்ணாச்சியும் மறுத்துவிட்டார்.

ச.வெ-11 -