பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 15

தன்னை அன்பரசன் என்று அறிமுகம் செய்து கொண்டு குலுக்குவதற்கு நீட்டப்பட்ட பாண்டியனின் கையை அப்படியே பிடித்து இழுத்து அவனை ஒரு பல்டி அடிக்க வைத்தான். நல்ல வேளையாகப் பாண்டியன் உயரமாகவும் பலமுள்ளவனாகவும் இருந்ததால் மோவாய்க்கட்டை தரையில் மோதிப் பல் உடைபடாமல் பிழைத்தது.

அவ்வளவில் பாண்டியன் விழித்துக்கொண்டான். அவர்கள் தன்னை வம்புக்கு இழுக்கப் போகிறார்கள் என் பது அவனுக்குப் புரிந்துவிட்டது. வார்டன் செய்த எச்சரிக் கையும் நினைவு வந்தது. முடிந்தவரை பொறுத்துப் போவ தென்று தனக்குள் முடிவு செய்து கொண்டான் அவன். ஆனால் அவர்களோ அவன் பொறுமையை அளவு கடந்து சோதித்தார்கள். அவனை வலிந்து துன்புறுத் தினார்கள்.

அன்பரசன் தன் சட்டைப் பையிலிருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்து உடனிருந்தவர்களுக்குக் கொடுத்து விட்டுத் தானும் ஒன்றை எடுத்துக் கொண்டு தீப்பெட் டியை பாண்டியனிடம் நீட்டி ஒரே தீக்குச்சியில் மூன்று பேருக்கும் பற்ற வைத்து விடும்படி சொன்னான். பாண்டியன் சிரித்துக் கொண்டே அதைச் செய்து முடித்து விட்டான்.

அன்பரசன் தன்னுடைய சிகரெட்டைப் பாதி புகைத்ததும் பாண்டியனிடம் நீட்டி,

“இந்தா. மீதியை நீ பிடி” என்று அதிகாரக் குரலில் சொன்னான். பாண்டியன் முகத்தில் சிரிப்பு மறைந்தது. புருவங்கள் கூடி நெற்றி மேடு சுருங்கியது.

“வழக்கமில்லை. நன்றி...” ‘இதுவரை இல்லையானால் என்ன? இப்போது வழக்கப்படுத்திக்கொள்.”

“அவசியமில்லை.” “உன்னிடம் இருக்கும் வழக்கங்கள் எல்லாம் புனித மானவையும் அல்ல; இல்லாத வழக்கங்கள் எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/17&oldid=609204" இலிருந்து மீள்விக்கப்பட்டது