பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 169

மாணவிகள் பாரதியாரின் பாஞ்சாலி சபத நாடகத்தை நடித்தனர். கண்ணுக்கினியாள் பாஞ்சாலியாக நடித்து அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்றாள். அக்டோபர் இரண்டாம் தேதியன்று காலை காந்தியடி களின் ஜெயந்தி நாளன்று அவருக்கு அஞ்சலி செலுத்துவதற் காகப் பல்கலைக் கழக ஆடிட்டோரியத்தில் மாணவர்கள் கூடியிருந்தார்கள். பாதிக் கூட்டம் நடப்பதற்குள்ளேயே மருத்துவக் கல்லூரி விடுதியைச் சேர்ந்த மேரி தங்கம் என்ற மாணவி ஒருத்தி தற்கொலை செய்து கொண்ட செய்தி பரவிக் கூட்டம் கலைந்தது. ஏற்கெனவே திருமண மான விரிவுரையாளர் ஒருவர்தான் இந்தத் தற்கொலைக்கு மூலகாரணம் என்று தெரிய வந்ததும் எல்லாப் பிரிவு மாணவர்களும் அந்த விரிவுரையாளரின் இராஜிநாமா வைக் கோரி ஒன்று திரண்டனர். தேர்வுகள் தள்ளிப் போடப்பட்டுக் காலாண்டு விடுமுறைக்காக முன்கூட்டியே பல்கலைக் கழகத்தை மூடச்செய்து உடனே விடுதிகளைக் காலி செய்யுமாறு மாணவர்களுக்கு உத்தரவு இட்டார் துணைவேந்தர். சம்பந்தப்பட்ட விரிவுரையாளர் ஒரு மந்திரிக்கு நெருங்கிய உறவினர் என்பதால் அவர் மேல் நடவடிக்கை எடுக்க அஞ்சிப் பல்கலைக் கழகத்தை மூடி னார்களே தவிர அமைதிக்காக மூடவில்லை என்பது எல்லா மாணவர்களுக்கும் புரிந்துதான் இருந்தது. துணை வேந்தரும், டாக்டர்களும், அதிகாரிகளும், போலீஸும் மந்திரிக்காகப் பயந்து எவ்வளவுக்கு எவ்வளவு மூடி மறைக்க முயன்றார்களோ அவ்வளவுக் கவ்வளவு எல்லா உண்மைகளும் வெளியாகிப் பரவிவிட்டன. தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பிரேதத்தைப் பரிசோதனை செய்தபோது அவள் கருவுற்றிருந்தது தெரிய வந்தது. நிச்சயமாக அதற்கு அந்த விரிவுரையாளரே காரணம் என்று அவளே எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றும் மாண வர்கள் கையில் சிக்கியிருந்தது. ஆளும் கட்சிக்கு வேண்டி யவரான அந்த விரிவுரையாளர்மேல் நடவடிக்கை எடுக்கப் பயந்து எல்லாரும் ஒதுங்கிவிட்டதாகத் தெரிந்தது. பல் கலைக் கழகத்தை மூடி விடுதிகளைக் காலி செய்யச்