பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 171

அந்தக் கடிதம் காரணமாயிருக்க வேண்டாம் என்று கருதியோ என்னவோ அந்தக் கடிதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வெளியேறித் தன்னால் முடிந்தவரை முடிந்த இடங்களில் அவளைத் தேடிப் பார்த்திருக்கிறாள். அவள் கிடைக்கவில்லை. பயத்தினால் யாரிடமும் இதை அந்தப் பக்கத்து அறை மாணவி வெளியிடவில்லை. ஆனால் அக்டோபர் இரண்டாம் தேதி பிற்பகலில் பல் கலைக் கழக மாணவர் பேரவைத் தலைவன் மோகன் தாளை இரகசியமாகச் சந்தித்து நடந்ததைச் சொல்லி, சிநேகிதியின் அறையில் தான் எடுத்த கடிதத்தையும் கொடுத்துவிட்டாள் அந்த மாணவி. அந்தக் கடிதம் இறந்தவள் தற்கொலை செய்து கொண்டு தான் இறந்தாள் என்பதையும், குற்றவாளியான விரிவுரையாளர் அவளிடம் எல்லை மீறி நடந்து கொண்டு அவள் வாழ்க்கையைப் பாழாக்கியதால்தான் அவள் தற்கொலைக்குத் துணியும் படி ஆயிற்று என்பதையும் தெளிவாக நிரூபிப்பதாக இருந்தது. -

தனிமையில் குற்றம் செய்வதற்குக் கூசாத மனிதர்கள் தாங்கள் செய்த குற்றங்கள் பொதுவில் நிரூபணமாகி விடுமோ என்ற நிலை வரும்போது மட்டும் கூசிக் கூசித் தவிப்பதுவிந்தைதான். மந்திரிவரை செல்வாக்கு உள்ள அந்த விரிவுரையாளரின் வீட்டுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. மருத்துவக் கல்லூரிப் பெண்கள் விடுதியைச் சுற்றியும் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு, யாருக்கும் உள்ளே அநுமதி மறுக்கப் பட்டது. விடுதிகளிலிருந்தும், பல்கலைக் கழக எல்லையி லிருந்தும் மாணவர்களை வெளியேற்றிவிட்டுப் போலிசைக் கூப்பிட்டுக் குடியேற்றியிருந்தார் துணைவேந்தர். மந்திரிக் குச் சொந்தக்காரரான ஒழுக்கமற்ற ஒரு விரிவுரை யாளரைக் காப்பாற்றுவதற்காக மேலும் பல ஒழுங்கு களைத் தவறவிட்டிருந்தார் துணைவேந்தர். போலீஸை வைத்து மிரட்டி நிர்ப்பந்தப்படுத்தி அக்டோபர் இரண் டாந் தேதி மாலை அறு மணிக்குள் எல்லா மாணவர்