பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 177

ரைச் சந்திக்க இரகசியமாக நிலக்கோட்டைக்கு விரைந்தது. ஆனால் நிலக்கோட்டையில் அந்தப் பெற்றோரின் வீடு பூட்டப்பட்டுக் கிடந்தது. அவர்களைப் பற்றிக் கேட்டாலே ஊரில் யாரும் பதில் சொல்லப் பயந்தார்கள். அந்தத் தெரு நிறைய சி.ஐ.டி.க்கள் நிரப்பப்பட்டிருந்தார்கள்.

பதினான்காவது அத்தியாயம்

அந்தக் கிராமத்தில் மாணவர்களின் நடமாட்டம் இரகசிய போலீஸாரால் கூர்ந்து கவனிக்கப்பட்டது. வந்த முதல் நாள் மாணவர்களால் எதுவுமே தெரிந்து கொள்ள முடியவில்லை. மேரி தங்கத்தின் பெற்றோர்களைப் பற்றி முனைந்து விசாரித்தபின் அவர்கள் இரண்டு மூன்று நாட்களுக்கு முன் அந்த ஊர் எல்லையிலிருந்து போலீஸ் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு போகப்பட்ட விவரத்தை மட்டுமே சிரமப்பட்டுத் தெரிந்து கொள்ள முடிந்தது. மேரி தங்கத்தின் பெற்றோர் வீட்டில் மட்டுமின்றி அவர்களு டைய நெருங்கிய உறவினர் வீடுகள் இருந்த தெருக்களிலும் இரகசிய போலீஸார் குவிக்கப்பட்டிருந்தார்கள். உண்மை யின் சிறியதொரு கீற்றும் வெளியே தெரிந்து விடாமல் மறைக்கப்பட்டிருந்தது அங்கே. மாணவர்களும் நம்பிக்கை இழந்துவிடவில்லை. பூட்டப்பட்டிருந்த வீட்டுக்கு எதிர்த்த வீட்டுத் திண்ணையிலேயே கூட்டமாக அமர்ந்து கண் காணிக்கத் தொடங்கினார்கள் அவர்கள். எதற்கும் அஞ்சா தவர்களும், உடல் வலிமையும் மனவலிமையும் மிக்கவர் களுமாகிய பதினைந்து பேர் ஒரு குழுவாக வந்திருந்த தனால் அந்த மாணவர்கள் சிறிது கூட அயர்ந்துவிட வில்லை. அந்தப் பதினைந்து மாணவர்களுக்கும் கதிரேசன் என்ற மாணவனைத் தலைவனாக நியமித்து அனுப்பியி ருந்தார்கள் பாண்டியனும், மோகன்தாஸ் சம். உண்வு சிற்றுண்டி வேளைகளுக்கு ஆறு ஏழு பேர்களாகக் கடை வீதியிலுள்ள ஹோட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பிவந்து அந்த எதிர்வீட்டுத் திண்ணையிலேயே

ச.வெ-12 .