பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 179

அவர்மேல் ஒரளவு மதிப்பு உண்டாகியிருந்தது. அதிகாரி களும், பதவிகளில் இருக்கும் படித்தவர்களும் எப்படி எப்படி எந்தெந்தத் தவறுகளை யார் யாருக்குத் திட்ட மிட்டுச் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் காலத்தில் ஒரு சாதாரணத் தவற்றைக் கூடச் செய்ய யோசித்துத் தயங்கும் கருப்பசாமி சேர்வை மிகவும் பெரிய மனிதராகத் தோன்றினார்.

கருப்பசாமி சேர்வை சொன்ன யோசனைப்படி அந்த வாசக சாலையில் போய்த் தங்கிக் கொண்டார்கள் மாணவர்கள். அந்த வாசகசாலை முகப்பிலிருந்தும் மேரி தங்கத்தின் பெற்றோர் வீட்டை நன்றாகக் கவனித்துக் கண் காணிக்க முடிந்தது. வாசக சாலைக்குச் சென்றதனால் சில புதிய நன்மைகளும் உண்டாயின. அங்கே படிக்க வருகிறவர்களிடம் பேச்சுக் கொடுத்துச் சில விவரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

மல்லிகைப் பந்தல் நிலவரத்தைப் பற்றியும் பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்டார்கள் அவர்கள். பல்கலைக் கழகத்தை உடனே திறக்கக் கோரியும், மேரி தங்கத்தின் மரணத்தைப் பற்றிய பொது விசாரணையை வேண்டியும் பாண்டியன் முதலியவர்கள் தொடங்கியிருக்கும் உண்ணா விரதம் மல்லிகைப் பந்தல் நகர மக்களின் ஆதரவையும் கவனத்தையும் கவர்ந்திருப்பதாகவும், தோட்டத் தொழிலா ளர்கள் ஊர்வலமாக வந்து உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு மாலை சூட்டியதாகவும் ஆளும் கட்சியைத் தவிர நகரின் மற்ற எல்லாக் கட்சிப் பிரமுகர் களும் உண்ணாவிரதத்துக்கும், கோரிக்கைகளுக்கும் தங்கள் ஆதரவுகளைத் தெரிவித்து அறிக்கைகள் விட்டிருப்பதா கவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்திருந்தன. கதிரேசனும் மற்ற மாணவ நண்பர்களும் அவற்றை யெல்லாம் படித்து மகிழ்ந்தார்கள். நியாயங்களுக்காகத் தாங்கள் போராடும் போராட்டம் வெற்றி பெற்றே தீரும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டாயிற்று. அந்தக் கிராமத்துக்கு வந்த இரண்டாம் நாள் மாலையில்