பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f82 சத்திய வெள்ளம்

“ஒ தெரியும் சார். எத்தனை மணிக்கு நாம் புறப்பட வேண்டியிருக்கும்?”

“இரவு பத்தரை மணிக்குப் புறப்படலாம். ஆனால், இருவரும் ஒன்றாகச் சேர்ந்து இங்கிருந்து புறப்படக் கூடாது. ஊர்க் கோடியிலுள்ள ஆலமரத்தடியில் நான் இரண்டு சைக்கிள்களோடு காத்திருப்பேன். நீங்கள் யாரும் சந்தேகப்படாதபடி எங்கோ சுபாவமாகப் புறப்பட்டு வருவது போல் அந்த ஆலமரத்தடிக்கு வர வேண்டும். புறப்படுமுன் யாரும் உங்களைப் பின் தொடரவில்லை என்பதையும் நீங்களே உறுதி செய்து கொள்ள வேண்டும்.”

கதிரேசன், பிச்சை முத்து சார் கூறிய யோசனைக்குச் சம்மதித்து அதன்படி செய்ய ஒப்புக்கொண்டான்.

“நீங்கள் வற்புறுத்துகிறீர்களே என்பதற்காகத்தான் உங்களை நான் மிஸ்டர் சற்குணத்திடம் அழைத்துக் கொண்டு போகிறேன். எனக்கு அவரைச் சந்திப்பதில் இனிமேல் நம்பிக்கை எதுவும் கிடையாது. நம் முயற்சி காலங்கடந்து விட்டது. மகளைக் கற்பழித்த இளம் விரிவுரையாளரின் உறவினரான மந்திரியின் சார்பில் எங்கள் ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் மூலம் ரூபாய் இருபத்தையாயிரம் சற்குணத்தின் கைக்கு மாறிவிட்டது. “என் மகளுக்குத் தூக்கத்தில் நடக்கும் வியாதி உண்டு. அவள் தவறித் தண்ணிரில் விழுந்து மரணமடைந்திருப்பதை ஒப்புக் கொள்கிறேன்’ என்று சற்குணமே எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பதற்கு விலையாக இந்தத் தொகையைப் பேரம் பேசி அவரிடம் கொடுத்து விட்டார்கள்.”

“ஒரு தந்தை தன் மகளின்மேல் உள்ள பாசத்தை இருபத்தையாயிரம் ரூபாய்க்கு விற்று விட முடியுமா சார்?” “முடியுமா, முடியாதா என்பது எனக்குத் தெரியா விட்டாலும் மிஸ்டர் சற்குணத்தால் அது முடிந்திருக்கிறது என்பதை நான் பிரத்தியட்சமாகக் காண்கிறேன். மல்லி கைப் பந்தலுக்குப் போய்ப் பெண்ணை அடக்கம் செய்த