பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 183

இடத்தில் ஒரு தடவை குய்யோ முறையோ என்று கதறி அழுதுவிட்டு, அப்படி அழுத இடத்திலேயே பெற்ற பாசத் தையும் சேர்த்துப் புதைத்துவிட்டு வந்திருக்கிறார் அவர்.” “மாணவர்களாகிய நாங்கள் உண்மையை எப்படியும் வெளிப்படுத்தியே தீருவோம். விசாரணை கோரியும், பல் கலைக் கழகத்தை உடனே திறக்க வேண்டியும், எங்கள் பிரதிநிதிகள் மல்லிகைப் பந்தலில் உண்ணாவிரதம் தொடங்கியிருக்கிறார்கள் சார்!” - “உண்ணாவிரதத்தை எல்லாம் மிகவும் சுலபமாகச் சமாளித்துவிடுவார்கள் அவர்கள், ஒழுக்கமும், நேர்மையும் மற்றவர்கள் மனச்சாட்சியை மதிக்கும் நல்லெண்ணமும் உள்ளவர்கள் கையில் அதிகாரம் இருந்தால்தான் உண்ணா விரதம் போன்ற சாத்வீகப் போர் முறைகள் பயன்படும். குறுகிய நோக்கம் உள்ளவர்கள் உண்ணாவிரதத்தைக் கூட அவமானப்படுத்திவிட முடியும். ஐ.பி.ஸி. செக்ஷன் த்ரீ நாட் நயன் (309) படி தற்கொலை முயற்சி என்று உண்ணா விரதத்தைத் தடுத்து மாணவர்களை உள்ளே தள்ளப் போகிறார்கள் பாருங்கள். நான் சொல்கிறபடி நடக்கா விட்டால் அப்புறம் என்னை ஏனென்று கேளுங்கள்!”

வாசக சாலையில் சந்தித்த சிறிது நேரத்திலேயே டிரில் மாஸ்டர் பிச்சைமுத்து கதிரேசனோடும் மற்ற மாணவர் களோடும் மனம் விட்டுப் பழகத் தொடங்கியிருந்தார். அவரிடமிருந்து பல செய்திகள் தெரிந்தன.

“நேற்றைக்கு முன்தினம் குளத்தில் விழுந்து இறந்த மேரி தங்கத்தின் புகைப்படம் ஏதாவது கிடைக்குமா என்று தேடி மதுரையிலிருந்து பத்திரிகைக்காரர்கள் ரெண்டு பேர் வந்திருக்கிறார்கள். எங்கே அவர்களுக்குப் படம் கிடைத்து விடமோ என்ற பயத்தில் மிஸ்டர் சற்குணத்தின் வீட்டிலிருந்த அவர் மகள் சம்பந்தப்பட்ட எல்லாப் புகைப் படங்களை யும் போலீஸார் எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். சற்குணத்தின் சொந்தக்காரர்கள் வீடுகளுக்கெல்லாம் சென்று ‘உங்ககிட்டே மேரி தங்கத்தின் போட்டோ ஏதாவது இருந்தாலும்கூட அதை யாருக்கும் கொடுக்கக்