பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#84 சத்திய வெள்ளம்

கூடாது’ என்று கண்டிப்பாக மிரட்டிப் பயமுறுத்தியிருக் கிறார்கள்.”

“போட்டோ வேணும்னா நாங்க தரமுடியும் சார்! எங்க யூனிவர்சிடி மெடிகல் காலேஜ் குரூப் போட்டோ எதிலேயாவது மேரி தங்கத்தின் படம் கிடைக்கும்” என்றான் கதிரேசன்.

“போட்டோ ஒன்று உடனே எனக்கு வேண்டும் என்ப தற்காக மட்டும் இதை நான் உங்களிடம் சொல்லவில்லை. அதிகாரத்தின் கிளைகளால் நிஜத்தின் எல்லா ஊற்றுக் கண்களையும் எப்படி உடனுக்குடன் அடைத்துவிட முடி கிறது பாருங்கள் என்பதற்காகவே இதைச் சொன்னேன்” என்றார் பிச்சைமுத்து.

அன்றிரவு திட்டமிட்டபடி ஊர்க் கோடியிலிருந்த ஆலமரத்தடிக்குச் சென்று அங்கிருந்து நாலு மைல் தொலை வில் உள்ள பஞ்சாயத்துத் தலைவரின் வாழைத் தோட் டத்துக்குச் சைக்கிளில் போனார்கள் பிச்சைமுத்துவும் கதிரேசனும், வாழைத் தோட்டம் ஒரு சிறு குன்றின் சரிவில் இருந்தது. தோட்டத்தின் முகப்பில் ஆட்கள் காவல் இருந்தார்கள். சைக்கிள்களை ஒரு சோளக் காட்டில் கழுத் தளவு வளர்ந்து கதிர் வாங்கியிருந்த சோளப் பயிருக்கு நடுவே மறைத்து வைத்துவிட்டு முகப்பு வழியாக வாழைத் தோட்டத்தில் நுழையாமல் கதிரேசனும், பிச்சைமுத்துவும் ஒரு பர்லாங் தொலைவுக்கு மேல் சுற்றிப் போய்க் காடாரம்பமான ஒரு புதரிலிருந்து தோட்டத்துக்குள் பிரவேசித்தார்கள்.

அன்று மாலையில்தான் தண்ணிர் பாய்ச்சியிருந்த தால் வாழைத் தோட்டம் சேறும் சகதியுமாக வேகமாய் நடந்து போக முடியாதபடி இருந்தது. நரிகள் வேறு குறுக்கே ஒடின. ரேடியம் உருண்டைகள் போல் இருளில் மின்னும் நரிகளின் கண்கள் கதிரேசனுக்கு ஒரளவுக்குப் பயம் ஊட்டின.

“பயப்படாமல் வரலாம் மிஸ்டர் கதிரேசன்! காட்டு நரிகளையெல்லாம் விட தந்திரமான குள்ளநரிகள் -