பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 சத்திய வெள்ளம்

முகம் நினைவு வந்தது கதிரேசனுக்கு. “சர்ச்சுக்குப் போகக் கூட விட மாட்டேங்கிறாங்க. இங்கே கொண்டாந்து தள்ளிக் கழுத்தறுக்கிறாங்கப்பா...” என்று சற்குணம் தொடங்கியவுடனே,

“உங்க மேலேயும் தப்பிருக்கு மிஸ்டர் சற்குணம்!” என்று ஆரம்பித்தார் பிச்சைமுத்து. “நீங்க இவ்வளவு பயந்து போய்த் தூக்கத்திலே நடக்கறப்பத் தவறி விழுந்து மரணம்னு எழுதிக் கொடுத்துப்பிட்டு வந்திருக்கக் கூடாது. இதோ இந்தத் தம்பி கதிரேசன் யுனிவர்ஸிடியிலே இருந்து தான் வந்திருக்காரு. இவரும் மற்ற மாணவர்களும் உங்க பெண்ணைப் பற்றி விசாரணை வேணும்னு அங்கே யுனிவர்ஸிடி வாசலிலே உண்ணா விரதம் தொடங்கி யிருக்காங்க. நீங்க என்னடான்னா..? மேலே சொல்ல இருந்ததைச் சொல்லாமலே பாதியில் பேச்சை முடித்து விட்டார் பிச்சைமுத்து. கதிரேசன், தானும் மற்ற மாணவர் களும் அங்கே வந்த விவரத்தைச் சற்குணத்திடம் சொல்லி அவரிடம் சில கேள்விகள் கேட்டான். பிச்சைமுத்து புறப் படும் முன்பே சொல்லியது சரியாக இருந்தது. சற்குணம் எதற்கும் பிடி கொடுக்கவில்லை. எதைக் கேட்டாலும்,

“என்னை எதுவும் கேட்காதீங்கப்பா! நான் ஏற்கனவே ரொம்ப மனசு நொந்து போயிருக்கேன். மல்லிகைப் பந் தலுக்குக் கூட்டிக்கிட்டுப் போய்த் திருப்பிக் கொண்டாந்து என் வீட்டுக்குக் கூடப் போக விடாமே ஜெயில்லே வச்ச மாதிரி இங்ஙனே கொண்டாந்து வச்சுப்பிட்டாங்க. எனக்கு ஒரு மகளே பிறந்திருக்க வேண்டாம். அதனாலே நான் இப்படிச் சீரழியவும் வேண்டாம்” என்று நழுவினாற் போலத்தான் பதில் சொன்னார். ஆனால் பிச்சைமுத்து அவரை விடவில்லை. -

“நீங்க ஏன் சீரழியப் போlங்க? மகள் போனதினாலே உங்களுக்கு வேறே புதிய செளகரியங்கள் கூடக் கிடைச்சி ருக்கலாம். உங்க துக்கத்தைக்கூட பஞ்சாயத்து சேர்மன் விலை பேசி வாங்கியிருப்பாரு."