பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி $89

சரியில்லை. ஆட்கள் சந்தேகப்பட்டுச் சுற்றிக் கொண்டி ருக்கிறார்கள். இப்போது நாம் தெரிந்து கொண்டதைவிட அதிகமாக எதையும் மிஸ்டர் சற்குணத்தினிடம் இனி நாம் தெரிந்து கொண்டுவிட முடியாது. முதலில் நாம் இங்கிருந்து வெளியேறித் தப்பியாக வேண்டும் இல்லாவிட்டால் ஆபத்து” என்றார் பிச்சை முத்து. அந்த வேளையில் உள்ளுர்க்காரரும் அநுபவ சாலியுமாகிய அவர் பேச்சைக் கேட்டு அதன்படி நடப்பது தான் நல்லதென்று கதிரேசனுக்கும் தோன்றியது. அவர்கள் இருவரும் வாழைத் தோட்டத்திலிருந்து காட்டு வழியாகச் சுற்றி நடந்து மறுபடியும் சோளக் கொல்லைக்குப் போய் சைக்கிள்களை எடுத்துக் கொண்டு திரும்பவும் ஆலமரத்தடிக்கு வந்து சேர்ந்த பின்பே நிம்மதியாக மூச்சு விட்டார்கள். அப்போது ஏறக் குறைய இரவு ஒரு மணிக்கு மேலாகியிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் டுரிங் தியேட்டரில் சினிமா விட்டுவிடு வார்கள். ஆதலால் அந்தக் கூட்டத்துக்கு முந்தியே ஊருக் குள் தனித்தனியே பிரிந்து சென்றுவிட எண்ணினார்கள் அவர்கள். -

டிரில் மாஸ்டர் பிச்சை முத்து கூறினார்: “மிஸ்டர் கதிரேசன்! இனிமேல் நீங்களும் உங்களைச் சேர்ந்த மாண வர்களும் தொடர்ந்து இந்த ஊரில் தங்கிப் புதிதாக எதை யும் தெரிந்து கொள்ள வழி இல்லை. உங்களையெல்லாம் எப்படி எதில் மாட்டி வைக்கலாம் என்று இங்குள்ள பஞ் சாயத்துத் தலைவரும், போலீஸும் சதி செய்யக் காத்தி ருக்கிறார்கள். மல்லிகைப் பந்தலுக்குத் திரும்பச் சென்று அங்கே உங்கள் போராட்டத்தைத் தீவிரமாக வலுப்படுத் துங்கள். நீங்கள் விரும்பினால் காலை மூன்று மணிக்கு இங்கிருந்து புறப்படும் லாரி ஒன்றில் நம்பிக்கையாக உங்களை ஏற்றி அனுப்புகிறேன்.”

“ஒரு லாரியில் நாங்கள் அத்தனைபேரும் போக முடியாதே சார்?” -

“மல்லிகைப் பந்தலிலிருந்து கறிகாய் ஏற்றி வந்த லாரி தான் இங்கிருந்து காவியாகத் திரும்பப் போகும். டிரைவர்