பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 சத்திய வெள்ளம்

சீட்பக்கம் இருவரும் மற்றவர்கள் பின்னாலுமாக ஏறிக் கொண்டு போய்விடலாம் !... அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்.”

கதிரேசனும் அந்த ஏற்பாட்டுக்குச் சம்மதித்தான். பாண்டியன் முதலிய மாணவர் தலைவர்களால் தாங்கள் எதற்காக அனுப்பப்பட்டோமோ, அந்தக் காரியம் இந்தக் கிராமத்தில் முடிந்து விட்டதென்றே கதிரேசனுக்கும் தோன்றியது. பணத்துக்கும் அதிகாரத்துக்கும் பயந்து விட்ட சற்குணத்திடம் இருந்து மேலே எதுவும் தெரிய வழி இருப்பதாகத் தோன்றாததால் தன் நண்பர்களிடம் கலந்து பேசிப் பயணத்துக்குத் தயாரானான் கதிரேசன்.

பிச்சைமுத்து மாணவர்களின் பிரயாணத்துக்குச் சிரத்தையோடு எல்லா உதவிகளையும் செய்தார். பணத்துக் கும், அதிகாரங்களுக்கும் பயப்படுகிற மனப்பான்மையுள்ள ஒவ்வோர் இந்திய கிராமத்திலும் பிச்சை முத்துவைப் போல் யாராவது ஒரு தெளிவான - துணிவான மனிதர் மட்டும் இருக்க முடிவதைக் கதிரேசன் கண்டான். கிரா மத்தில் அந்த ஒருமனிதர் இருக்கிறார் என்பதைவிட அந்த ஒரு மனிதரே கிராமமாக இருக்கிறார் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும் என்பதை நன்றியோடு நினைத்தான், கதிரேசன். லாரியில் புறப்படுவதற்குமுன் பிச்சைமுத்துவின் வீட்டில் அவர்கள் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த வேளையில் அவரு டைய புத்தக அலமாரியில் சமூகப் புரட்சிக்கும், கலாசார புரட்சிக்கும் வித்திட்ட பல நூல்களை அவன் பார்த்தான். ரூஸோவின் சமுதாய ஒப்பந்தம், காந்தியடிகளின் சத்திய சோதனை, கார்ல் மார்க்ஸின் மூலதனம், சேகுவேராவின் வரலாறு முதலியவற்றை அங்கே காணமுடிந்தது. பிச்சை முத்துவின் அஞ்சாமைக்கும், தெளிவுக்கும் காரணமான நூல்களைக் கதிரேசன் அங்கே கண்டபோது அந்தக் கிராமத்தில் அவருடைய தனித்தன்மைக்கும், கொள்கைப் பிடிப்புக்கும் காரணம் என்ன என்பது புரிந்தது. புறப் படுவதற்கு முன்னர், “உங்களைப் போன்ற இளைஞர்