பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 சத்திய வெள்ளம்

விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்களில் வெளியூரைச்சேர்ந்த பெருவாரியான மாணவர்கள் தங்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்றுவிட்ட காரணத்தால் நகரில் மாணவர்களின் கூட்டம் குறைந்திருந்தது. உள்ளூர் மான வர்களும், பாண்டியன் முதலிய போராட்டத்தில் ஈடுபட்டி ருந்த முக்கியமானவர்களுமே நகரில் மீதிமிருந்தனர். பல்கலைக் கழக விடுதிகளுக்கும் ஸ்டாஃப் குவார்ட்டர் ஸ்-க்கும் போலீஸ் காவல் இன்னும் நீடித்துக் கொண்டி ருந்தது. மேரி தங்கத்தின் மரணத்துக்குக் காரணமான இளம் விரிவுரையாளர், குடும்பத்தோடு வெளியேறி, எங்கோ இரகசியமாக வெளியூர் போயிருந்தார். இரவோடு இரவாகப் போலீஸ் ஜீப்பிலேயே போலீஸார் உதவியுடன் அவர் தப்பி வெளியேறிச் சென்றதாகப் பேசிக் கொண் டார்கள். பூட்டப்பட்டிருந்த அவர் வீடு இன்னும் போலீஸ் காவலில் பாதுகாக்கப்பட்டது. துணைவேந்தர் கல்வி மந்திரி யையும், கவர்னரையும் சந்திப்பதற்காகச் சென்னைக்குப் புறப்பட்டுப் போயிருந்தார். ஊர் நிலவரங்களைப் பற்றி அண்ணாச்சியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் பாண்டியனும் மற்றவர்களும் உண்ணாவிரதம் இருக்கும் இடமாகிய பல்கலைக் கழக வாசலை ஒட்டிய பகுதிக்குப் புறப்பட்டுப் போனார்கள் கதிரேசன் முதலியவர்கள். அங்கே பல்கலைக் கழகத்தின் முக்கிய வாயிலின் நடுவே பொதுவில் மூங்கில் தட்டியிட்டு மறைக்கப்பட்ட இரண்டு கீற்றுக் கொட்டகைகள் போடப்பட்டிருந்தன. கொட்டகைகளில் பெஞ்சுகள் போட்டு விரிப்புக்கள் விரித்து மாணவ மாணவிகள் அமர்ந்திருந்தார்கள். தலையணைகளும், கம்பளிப் போர்வைகளும் தென்படவே குளிர் என்றும், பனி என்றும் பாராமல் உண்ணாவிரதம் இருந்தவர்கள் அங்கேயே இரவிலும் இருப்பது தெரிய வந்தது. ஒரு கீற்றுக் கொட்டகையில் மாணவிகள் ஆறு பேரும், மற்றொரு கீற்றுக் கொட்டகையில் மாணவர்கள் ஆறு பேரும் தளர்ந்து சோர்ந்து போய்க் காட்சி அளித் தனர். கீற்றுக் கொட்டகைகளின் இருபுறமும் போலீஸார்