பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 197

தங்கத்திடம் தவறாக நடந்து கொண்டு அவள் தற்கொலைக் குக் காரணமாயிருந்த மதனகோபால் என்ற விரிவுரை யாளரைப் போலீஸும் பல்கலைக் கழக நிர்வாகமுமே, எச்சரித்து அங்கிருந்து வெளியேற்றி வேறு ஊரில் போய்த் தங்கும்படி அறிவுரை கூறித் தக்க பாதுகாப்போடு அனுப்பிவிட்டதாகவும் பூதலிங்கம் தெரிவித்தார். நகர மக்களிடையேயும், மலலை இராவணசாமியின் கட்சியைத் தவிர உள்ள மற்ற அரசியல் கட்சிகளிடையேயும், மாணவர் களுக்குப் பேராதரவு இருந்தது. இராவணசாமியின் கட்சியினர் மட்டும், உண்ணாவிரதம் இருந்தால் உடம்பு இளைக்கும். உடம்பு இளைப்பது மாணவர்களுக்கு நல்லது - இப்படிக்கு உடல் நலம் நாடுவோர் சங்கம் - என்று கற்பனையாக ஒரு பொய்ப் பெயரைக் கீழே போட்டுக் கிண்டலான சுவரொட்டி ஒன்றை அச்சிட்டு மல்லிகைப் பந்தல் நகரம் எங்கும் ஒட்டியிருந்தார்கள். இது மாணவர் களின் கொதிப்பையும் குமுறலையும் அதிகப்படுத்தி இருந்தது. கோழைத்தனத்தினாலும் பயத்தினாலும் மல்லை இராவணசாமியின் ஆட்கள் அந்தச் சுவரொட்டியிலும் தங்கள் கட்சிப் பெயரை அச்சிட அஞ்சிப் பொய்யாக, ‘உடல் நலம் நாடுவோர் சங்கம் என்று போட்டிருந்தாலும் எம்.எல்.ஏதான் அதை அச்சிட்டு ஒட்ட ஏற்பாடு செய்தார் என்பதை அண்ணாச்சி உளவறிந்து கொண்டு வந்து சொல்லிவிட்டார். கதிரேசன் போன்ற மாணவர்கள் நிலக் கோட்டையிலிருந்து திரும்பிய தினத்திற்கு மறு தினம் உண்ணாவிரதம் இருந்தவர்களின் நிலை மிகவும் தளர்ந்து விட்டது. அன்று பிற்பகலில் அநேகமாக ஆறு மாணவி களும், ஆறு மாணவர்களும் தளர்ந்து படுத்துவிட்டார்கள். சிலர் நிலை கவலைக்கிடம் ஆகியிருந்தது. மாணவர்களுக்கு ஆதரவாகத் தாங்களும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக மல்லிகைப் பந்தல் வட்டாரத் தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் வேறு அறிவித்திருந்தது. துணை வேந்தர் இன்னும் சென்னையிலிருந்து திரும்பவில்லை. பதிவாளர் பயந்து நடுங்கினார். உண்ணாவிரதம் இருக்கும்