பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i8 சத்திய வெள்ளம்

கண்டதும் அந்தக் கூட்டம் பெட்டிப் பாம்பாய் அடங்கி விட்டதைப் பாண்டியன் பார்த்தான். ஆவேசமாக வந்த அனயரசன,

“அந்தப் பையனை வெளியிலே விட்டுடுங்க. வீணா நீங்க இதிலே சம்பந்தப்படாதீங்க..” என்று அண்ணாச்சிக் குக் கோரிக்கை விடுத்தான். அண்ணாச்சி மீசையை முறுக்கி விட்டுச் சிரித்துக்கொண்டார்.

“அதுக்கில்லே தம்பி! ஏதோ படத்தைக் காமிச்சு அதுக்கு முன்னாலே மண்டி போட்டுக் கும்புடனு மின்னிங்களாமே; அதை இந்தத் தம்பி மட்டும் தனியாவா செய்யிறது?. கூட வந்து மண்டி போடறதுக்கு இன்னும் கொஞ்சப் பேரை வரச்சொல்லியிருக்கேன். இருந்து அவங் களையும் கூட்டிக்கிட்டுப் போங்க..” என்று அண்ணாச்சி சொல்லி முடிப்பதற்குள்ளேயே திமுதிமு திமுவென்று நானூறு ஐநூறு பேரடங்கிய ஒரு பெரிய மாணவர் கூட்டம் அங்கே வந்து அன்பரசன் குழுவினரை வளைத் துக் கொண்டது. பாண்டியனைக் கொடுமைப்படுத்திய தற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்ட பின்பே அன்பரசன் குழு அங்கிருந்து தப்ப முடிந்தது. அப்போது மணவாளன் என்ற என்ஜினியரிங் மாணவரை அண்ணாச்சி பாண்டி யனுக்கு அறிமுகப்படுத்தி, “இங்கே இவரைப்போல் நம்ம ஆளுங்க நிறைய இருக்காங்க தம்பீ! பயப்படாதீங்க... உங்களை யாரும் எதுவும் பண்ணிட முடியாது. ஆனா அந்தப் பய ரூம்லே இனிமே நீங்க இருக்க வேண்டாம். நம்ம வகை சீனியர் மாணவர் ஒருத்தரையே தன் ரூமுக்கு உங்களை அழைச்சிக்கிட ஏற்பாடு பண்ணறேன்” என்று சொல்லி உடனே வந்திருந்த மாணவர்கள் மூலம் அதற்கும் ஏற்பாடு செய்துவிட்டார் அவர். -

அன்று இரவே அவன் அறை மாறிவிட்டான். வார்ட னிடம் நடந்ததைச் சொல்ல ஒரு பெரும் மாணவர் கூட்டமே சென்றதால் அவர் அந்த வேண்டுகோளை மறுக்க முடியவில்லை. மறுநாள் காலையிலேயே புது மாணவர்களிடையே அவனை ஹீரோ ஆக்கியிருந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/20&oldid=609271" இலிருந்து மீள்விக்கப்பட்டது