பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 சத்திய வெள்ளம்

பன்னிரண்டு பேர்களில் ஒருவருக்கு ஏதாவது நேர்ந்து விட்டாலும் நகரில் உள்ள ஆயிரக் கணக்கிலான மாணவர் கள் கொதித்து எழுவார்களே என்பதுதான் பதிவாளரின் பயமாக இருந்தது. அவர் போலீஸ் அதிகாரியைச் சந்தித் தார். போலீஸ் அதிகாரி சென்னை ஐ.ஜியோடு ஃபோனில் பேசினார். ஐ.ஜி. மந்திரியைப் போய்ப் பார்த்துக் கலந்து ஆலோசனை செய்தார். மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழக விவகாரம் மல்லிகைப் பந்தல் நகரத்தோடு போகாமல் மாநிலம் முழுவதும் உள்ள இளம் மாணவ சமூகத்தைக் குமுறி எழச் செய்துவிடுமோ என்று மந்திரிக் கும் உள்ளூரப் பயமாகத்தான் இருந்தது. ஆனாலும் ஜம்பத்தையும் வரட்டுத் திமிரையும் விட்டுக் கொடுக்க அவர் தயாராயில்லை. அவருடைய கட்சியும் தயாரா யில்லை. அதிகாரத்தை முழு மூச்சோடு பயன்படுத்த நினைத்தார் அவர். அதன் விளைவு அன்று மாலையே மல்லிகைப் பந்தலில் உண்ணாவிரதம் இருந்த மாணவ மாணவிகள் பன்னிரண்டு பேர்களும் ஐ.பி.சி. செக்ஷன் முந்நூற்று ஒன்பதின்படி தற்கொலை செய்து கொளள் முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப் பெற்று ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றப்பட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப்பட்டார்கள். கதிரேசன் பிச்சை முத்துவின் வார்த்தைகள் பலித்துவிட்டதைக் கண்ணால் பார்த்தான்.

“நிச்சயமாகத் தற்கொலை செய்து கொண்டுவிட்ட ஒரு மாணவியைப் பற்றி விசாரிக்காமல் மூடி மறைக் கிறார்கள். அதே சமயத்தில் சும்மா உட்கார்ந்திருப்பவர்கள் மேல் தற்கொலை முயற்சி’ என்று குற்றம் சுமத்திக் கைது செய்கிறார்கள்” என்று ஊரார் தங்களுக்குள் பேசி அரசாங்கத்தை எள்ளி நகையாடும்படி காரியங்கள் நடந்தன. அமைதியாக உண்ணாவிரதம் இருந்த மாணவர் களின் முயற்சியைத் தந்திரமாக முறியடிக்க அரசாங்கம் மேற்கொண்ட நரித்தனமான காரியத்தால் மல்லிகைப் பந்தல் நகரப் பொதுமக்களும், பெற்றோர்களும், தொழிலா