பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 199

ளர்களும் கொதித்தெழுந்தனர். மாணவர்களைக் கைது செய்து ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று இரவிலேயே போலீஸார் நகர எல்லைக்குள் யாரும் எதற்காகவும் ஒன்று சேர முடியாதபடி உடனே தடை உத்தரவும் போட்டுத் தடுத்துவிட்டார்கள்.

பதினாறாவது அத்தியாயம்

மேரி தங்கத்தின் தற்கொலை பற்றியும், மாணவர் களின் உண்ணாவிரதம் பற்றியும், பிற கோரிக்கைகள் பற்றியும் மதுரையிலிருந்தும், சென்னையிலிருந்தும் வெளி வருகிற எல்லாத் தினசரிகளிலுமே விரிவாகச் செய்திகள் பிரசுரிக்கப்பட்டுவிட்டதால் பிரச்னை தமிழ் நாடளாவி யதாக மாறிவிட்டது. மல்லிகைப் பந்தலைச் சேர்ந்த மாணவர்களின் கோரிக்கைகளை ஆதரித்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி நகரங்களின் மாணவர்களும், அதுதாப ஊர்வலங்களும், கூட்டங்களும் நடத்தினார்கள். மிகவும் துணிவுள்ள சில பத்திரிகைகள், மேரி தங்கத்தின் தற்கொலைக்கு மந்திரியின் உறவினரான ஒரு விரிவுரை யாளர்தான் காரணம் என்று மல்லிகைப் பந்தல் மக்களி டையே பரவலாக ஒரு பேச்சு இருப்பதை மறைக்காமல் முன் வந்து பிரசுரித்திருந்தன. பல்கலைக் கழகத்தைக் காலாண்டுத் தேர்வுக்கும் முன்பே மூடி, விடுமுறையையும் விட்டுவிட்டதால் பெரும்பாலான வெளியூர் மாணவர் கள் மூடிய ஐந்தாறு தினங்கள் வரை விடுதிகளுக்கு வெளியே அலைக்கழிக்கப்பட்டு ஊர் திரும்பி இருந்தனர். மாணவர்களின் உண்ணாவிரதம் மிகவும் தந்திரமாகவும் சமயம் பார்த்தும் ஒடுக்கப்பட்டதை எதிர்க்கப் போதுமான எண்ணிக்கை பலமுள்ள அளவு மாணவர்கள் அப்போது அங்கே அந்தப் பல்கலைக் கழக நகரத்துக்குள் இல்லை. ஐ.பி.ஸி. முந்நூற்றொன்பதாவது செக்ஷன்படி கைது செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு இன்ஜெக்ஷன் மூலம் உணவுச்சத்து அளித்து அவர்களுடைய உண்ணா