பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 20%

நகருக்குள் வருவதும், நகரிலிருந்து பல்கலைக் கழகத்துக்குள் போவதும் குறைந்து விடும். பல்கலைக் கழகம் மிகமிக அமைதியானதொரு தனி நகரம் போல் விலகித் தெரியும். போராட்டங்கள், பூசல்கள் அதிகம் நடத்த முடியாத மாதங்கள் இவை. பல்கலைக் கழக மைதானமும், பூங்காக் களும், ஏரியும், படகுத்துறையும், மரத்தடிகளும் ஆளரவ மின்றி-மெளனமாக அடைமழையில் குளித்துக் கொண்டி ருக்கக் கூடிய இந்தக் குளிர்ந்த மாதங்களில் வகுப்பறை களில், பரிசோதனைக் கூடங்களில், நூல் நிலைய நாற்காலி களில், விடுதி அறைகளில் மாணவர்களை நிறையப் பார்க்க முடியும். எங்கும் ஒருவித அமைதி தென்படும். இந்த மழைக் காலத்து மாதங்களில் பல்கலைக் கழகமும், நகரமும் ஆரவாரமோ, கலகலப்போ இன்றி மிகவும் nரியஸ்ஸாக’ இருப்பதுபோல் தோன்றுவதை முதற் பார்வையிலேயே யாரும் சுலபமாகப் புரிந்து கொண்டுவிட முடியும். அங்கே மழைக்காலத்தின் அடையாளமே இதுதான்.

ஆனால் இந்த ஆண்டிலோ மழையே சில வாரங்கள் தாமதமாகத்தான் தொடங்கியிருந்தது. இதே மழை நான்கைந்து தினங்களுக்கு முன்பதாகத் தொடங்கியிருக்கு மேயானால் பாண்டியனும் மற்ற மாணவ மாணவிகளும் உண்ணாவிரதத்துக்காக கொட்டகைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கவே முடியாமற் போயிருக்கும். போலீஸார் அவர்கள்மேல் தற்கொலை செய்து கொள்ள முயற்சி என்று குற்றத்தைச் சுமத்திக் கைது செய்த இரவு மழை பிடித்துக் கொண்டதனால் அடுத்த இரண்டு தினங் களில் அதை எதிர்த்து எதையும் யாரும் அங்கே செய்ய முடியவில்லை. -

மூன்றாம் நாள் துணைவேந்தர் சென்னையிலிருந்து திரும்பி இருந்தார். பல்கலைக் கழக சிண்டிகேட் அந்த வாரத்திற்குள் மிகவும் முக்கியமாகச் சந்திக்கப் போகிறது என்ற செய்தியும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் பேசப் பட்டுக் கொண்டிருந்தது. துணைவேந்தர் அவசர அவசர மாகப் பல்கலைக் கழகத்தை மூடியதும், விடுதிகளைக்