பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 203

பேப்பர்லே பார்த்தேன் தம்பீ! நவராத்திரி வேற வருது, ‘கண்ணுதான் வீட்டிலே கொலு வைக்கிறது வழக்கம். அதுக்கு நெனைவுதெரிஞ்ச நாளிலேயிருந்து அதுதான் கொலு வைக்குது. இந்த வருசம் இங்கே கொண்டாந்து சேர்த்துப் பிட்டோம்கிறத்துக்காகக் கொலு இல்லாமல் போயிடக் கூடாது. லீவோ விட்டாச்சு. இனிமே இங்கே என்ன வேலை? அதான் நாமே கூட்டிக்கிட்டுப் போயிடலாம்னு புறப்பட்டு வந்தேன். அது என்ன பேப்பர்லே என்னென் னமோ போட்டிருந்தானே தம்பி, அந்த நிலக்கோட்டைக் காரப் பொண்ணு ஏன் தண்ணிலே விழுந்து செத்துப் போச்சு...? அதுலே யாருமே சம்பந்தப்பட்டிருக்காங்க? என்ன சமாசாரம் ஊர்லே பத்தும் பலதுமாப் பேசிக்கிறாங்களே?” என்ற விசாரித்தார் நாயுடு. நடந்த விவரங்களை அண்ணாச்சி அவரிடம் தெரிவித்தார்.

“நீ சொல்றதைக் கேட்டாப் பயமாயில்ல இருக்கு! இந்த மாதிரி வாத்தியாருங்க இருக்கிற எடத்திலே வயசு வந்த பொண்ணுங்களைப் படிக்க விடறதுகூடத் தப்புப் போலிருக்கே” என்று அலுத்துக் கொண்டார், அண்ணாச்சி கூறிய விவரங்களைக் கேட்ட நாயுடு.

“எல்லா வாத்தியாருங்களையும் அப்படிச் சொல்லிட முடியாது நாயினா! இந்த யூனிவர்ஸிடியிலே மொத்தம் எண்ணுாறு வாத்தியாருங்க இருக்காங்க. ‘டீச்சிங் ஸ்டாஃப்ங்கிற இந்த எண்ணுறு பேரைத் தவிர நான்டீச்சிங் ஸ்டாஃப்னு மத்தவங்க ஒரு ஐந்நூறு பேர் தேறும். அப்பிடி இருக்கிற ஆயிரத்து முந்நூறு பேர்லே ஒரு பத்து இருபது பேர்தான் மோசமானவங்களா இருக்காங்க. மத்தவங்கள்ளாம் ரொம்பப் படிப்பு, மானம், மரியாதை யோடு நல்லா இருக்கிறவங்கதான். மோசமாகவும் ஒழுக்கக் குறைவாகவும் நடத்துகிற பத்து இருபது பேரும்கூட நிர்வாகமும், அரசாங்கமும் தங்களுக்கு வேண்டியவங்க கையிலே இருக்குதுன்னுதான் எதுக்கும் துணிஞ்சிடறாங்க. எதையும் தங்களால் மூடி மறைச்சிட முடியும்னுதான் தப்பாகப் போறாங்க. மத்தவங்க அத்தனை பேரும் தங்கள்