பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 19

இந்த நிகழ்ச்சி. இதற்காக அண்ணாச்சிக்கு அவன் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருந்தான்.

இப்போது இவ்வளவு காலத்துக்குப்பின் மீண்டும் நினைத்தபோதுகூட அந்தப் பழைய சம்பவம் நேற்று நடந்தது போல் நினைவிருந்தது. பியூசி முடிந்து பி.ஏ. முதலாண்டும் முடிந்து பல்கலைக் கழகமும், ஊரும் நண்பர்களும் நன்றாகப் பழக்கமான நிலையிலும் அன்று அண்ணாச்சி செய்த அந்த உதவியைப் பசுமையாக நன்றியோடு நினைவு வைத்துக் கொண்டிருந்தான் பாண்டியன்.

அவன் அண்ணாச்சி கடைக்குப் போய்ச் சேர்ந்த போது கொடியேற்றி முடிந்து எல்லாருக்கும் சுதந்திரதின “ஸ்வீட் வழங்கிக் கொண்டிருந்தார் அண்ணாச்சி. சைக்கிள் கடையின் பின்பக்கத்து அறையில் மாணவர்கள், நாலைந்து மாணவிகள் உட்படக் கூட்டமாக அமர்ந்திருந்தனர். பாண்டியனும் உள்ளே போய் அமர்ந்தான். பாண்டி யனைப் பார்த்ததுமே ஒருவன் ஆரம்பித்தான்;

“இந்த ஆண்டின் மாணவர் பேரவைச் செயலாளர் வந்தாச்சு!”

உடனே ஒரு பெரிய கைத்தட்டல் ஒலி எழுந்தது. அங்கிருந்த எல்லாரையும் அவனுக்குத் தெரியும். பெண் களில் மட்டும் ஒரே ஒரு புதுமுகம் - முகம் நிறைய மறைக்கும் கண்ணாடி அணிந்து அமர்ந்திருந்தாள். யாரென்று தெரியாத அவள் அத்தனைபேர் நடுவிலும் வண்ணங்கள் நிறைந்ததொரு பட்டுப் பூச்சிப்போல் தோன்றினாள். வந்து அமர்ந்ததுமே அவள் யார் என்று அறியும் ஆவல் இருந்தும் ஒரு பெண்ணைப் பற்றி முந்திக் கொண்டு அவசரப்பட்டு விசாரிப்பது மற்ற மாணவர் களிடையே தன்னைக் கேலிக்கு ஆளாக்கிவிடும் என்ற தயக்கத்தில் பேசாமல் இருந்தான் பாண்டியன்.

அண்ணாச்சி உள்ளே வந்து அவனிடம் ஒரு தாளைக் காட்டி, “எலலா மாணவர்களும் நீங்கதான் வரணும்னு ஆசைப்படறாங்க தம்பீ! இதிலே முன்மொழிபவர், வழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/21&oldid=609293" இலிருந்து மீள்விக்கப்பட்டது