பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 சத்திய வெள்ளம்

டார். இவரே இரகசியமாக ஒரு தரப்புக்கு ஆதரவாக இருந்து கொண்டு அப்புறம் எல்லாத் தரப்பு மாணவர் களின் தலைவராகவும் எப்படி விளங்க முடியும்? மேரி தங்கத்தின் தற்கொலைக்கு மதனகோபால்தான் காரணம் என்று தெரிந்து பின்பும் அவரை இவர் ஏன் பதவியி லிருந்து வெளியேற்றத் தயங்குகிறார்? தவறு செய்த ஒருவர் மந்திரிக்கு உறவினர் என்பதற்காக இவர் ஏன் தாட்சண்யப் படவேண்டும்? தவறு செய்தவர்களிடம் தாட்சண்யப் படுவது என்பது தவறுகளிடமே தாட்சண்யம் காட்டு வதற்குச் சமமானதுதான் என்பது இவருக்கு ஏன் புரிய வில்லை? இவ்வாறு தவறுகளுக்கு நடுவே ஸ்டாஃப் கவுன் விலைக் கூட்டி மற்றவர்களிடம் பூசி மெழுக என்ன தான் இருக்கிறதோ? தெரியவில்லை என்று அப்பா தங்க ராஜ் சாரிடம் கோபமாகப் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட் டேன். அப்பாவுக்கு ஸ்டாஃப் கவுன்ஸில் மீட்டிங்குக்குப் போகவும் வி.ஸி.யைப் பார்க்கவுமே பிடிக்கவில்லை. தங்கராஜ் சார்தான், நாம் நாலு பேர் போகாமல் விட் டால் எதிர்க் குரல்கூட இருக்காது. அவர்கள் விருப்பம் போல் எல்லாவற்றையும் முடிவு செய்து விடுவார்கள். அது நடக்காமல் இருக்கவாவது நாம் போக வேண்டும் என்று வற்புறுத்தி அப்பாவைக் கூப்பிட்டுக் கொண்டு போயி ருக்கிறார். அநேகமாகத் திரும்பி வருகிற நேரம்தான். நீ இன்னும் அரை மணி நேரம் காத்திருந்தால் அப்பாவைச் சந்தித்துவிடலாம்” என்றாள் கோமதி.

கண்ணுக்கினியாளும் அவளுடைய தோழியும் காத்தி ருந்தார்கள். பகல் இரண்டரை மணிக்குப் பேராசிரியர் பூத லிங்கமும் தங்கராஜ் சாரும் திரும்பி வந்தார்கள். வரும் போதே அவர்கள் இருவரும் எதற்காகவோ துணைவேந் தரைக் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டு வந்தார்கள். அவர்கள் உள்ளே நுழையவும் காலையிலிருந்து சற்று வெளி வாங்கியிருந்த வானம், மூடிக் கொண்டு மழை மீண்டும் கொட்டத் தொடங்கவும் சரியாக இருந்தது. கண்ணுக்கினியாளும், அவளுடைய தோழியும் பேராசிரி யர்களுக்கு எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தார்கள், !