பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 209

“வா அம்மா! நீ இன்னும் ஊருக்குப் போகவில்லையா? மாணவிகளைத்தான் விடுதலை செய்து விட்டார்களே? நீ அன்றைக்கே ஊருக்குப் போயிருப்பாய் என்றல்லவா நினைத்தேன்?” என்று கண்ணுக்கினியாளைக் கேட்டார் பூதலிங்கம். தந்தை ஊரிலிருந்து வந்திருப்பதையும் மாலை யில்தான் அவரோடு ஊர் திரும்ப இருப்பதையும் கண்ணுக் கினியாள் அவரிடம் கூறினாள். போலீஸ் காவலில் இருக்கும் மாணவர்கள் ஆறு பேரையும் எப்படி விடுவித்து வெளியே கொண் டு வருவது என்பது பற்றியும் ஆஸ்பத்திரிக்குப் போய் அவர்களைச் சந்திப்பது பற்றியும் யோசனை கேட்டாள்.

“ பெய்லில் வருவதோ மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வருவதோ மாணவர்களுக்குப் பிடிக்காது அம்மா! பாண்டியனே அப்படி எல்லாம் செய்ய விரும்ப மாட்டான். இப்போதிருக்கிற நிலைமையைப் பார்த்தால் அவர்களாகச் சீக்கிரம் விடுதலை செய்யவும்மாட்டார்கள் போலிருக்கிறது. ஏதேதோ பொய்க் குற்றச் சாட்டுக்களை மாணவர்கள் மேல் சுமத்தவும் இரகசிய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. என்ன செய்யலாம்? தேவதைகள் நிதானமாக நுழைய அஞ்சும் இடங்களில் முட்டாள்கள் சரேலென்று அவசரமாகவே நுழைந்து விடுகிறார்கள். அதி காரச் செல்வாக்கு உள்ளவர்களின் தலையீடு இந்த நாட்டின் பல்கலைக் கழகங்களை எப்படி எப்படியோ ஆக்கிவிட்டது. சர்க்கார் அதிகாரிகளை நண்பர்களாகவும் மாணவர்களை விரோதிகளாகவும் நினைக்கும் மனப் பான்மை உள்ளவரை நம் விஸியை யாரும் திருத்த முடியாது அம்மா! இன்னிக்கு “ஸ்டாஃப் கவுன்ஸிலிலேயும் ஒரே தகராறுதான். எங்களைப் போன்ற ஆசிரியர்கள் எல்லாரும் மாணவர்களுக்காக அநுதாபப்படுகிறோம். ஆனால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது. இப்போது நான் உன்னோடு ஆஸ்பத்திரிக்கு வந்தால்கூட என்னைக் கூப்பிட்டு, நீ ஏன் ஆஸ்பத்திரிக்குப் போய் மாணவர்களைப் பார்த்தாய்? என்று கேட்பார்கள் போலிருக்கிறது. நீங்கள் எல்லாம் உண்ணா

ச.வெ-14