பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 சத்திய வெள்ளம்

ருந்தது. கலைந்து போக முடியாமல் மழையினால் அங்கே தங்க நேர்ந்துவிட்டவர்கள் நெருக்கியடித்துக் கொண்டு நின்றார்கள். அண்ணாச்சி அங்கே தென்பட்ட தமக்குத் தெரிந்த ஒவ்வொருவருக்கும் நாயினாவை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசிக் கொண்டிருந்தார். கண்ணுக்கினியாளோ தன் மனத்தின் அந்தரங்கமான மகிழ்ச்சியைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளவும் முடியாமல் தனக்குள்ளேயே அடக் கிக் கொள்ளவும் முடியாமல் உடன் இருந்த வகுப்புத் தோழியோடு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள்:

“இந்த ஊரில் பலர் மழைக் காலத்தை வெறுக் கிறார்கள். ஆனால் எனக்கென்னவோ இந்த ஊரின் கோடைக் காலத்தை விட மழைக்காலம்தான் பிடித்திருக் கிறது. அறையிலேயே அடைத்துக் கொண்டு நமக்கு விருப்பமான ஆசிரியர்களின் நாவல்களை ஒவ்வொன்றா கப் படித்துத் தீர்க்க ஏற்ற காலம் இதுதான்!”

“அது மட்டுமில்லை, கண்ணுக்கிணியாள்! மழைக் காலத்துக்கும் காதலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப் பதாக நம் இலக்கியங்கள் எல்லாம் சொல்லுகின்றன!” என்று அவள் மனநிலையைப் புரிந்து கொண்டு கண்ணைச் சிமிட்டியபடி குறும்பாகப் பதில் சொன்னாள் வகுப்புத் தோழி. அவள் தன்னைச் சரியாகக் கண்டுபிடித்துவிட்டாள் என்பது கண்ணுக்கினியாளுக்குப் புரியவும் நாணம் வந்து அவளைக் கவ்விக் கொண்டது.

“சிவகாe! காதலைப் பற்றி நீ ஏதாவது “தீஸிஸ் எழுதப் போகிறாயா என்ன? ரொம்பத்தான் அதைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்து வைத்திருக்கிறாய் போலிருக்கிறதே.” “அப்படி ஏதாவது எழுதினால் அதில் அநுபவம் உள்ளவளான உன்னைக் கேட்காமலா செய்வேன்?”

“ஏதேது வாய்க் கொழுப்பு அதிகமாகிறாற் போலிருக் கிறதே? விவரம் தெரியாமல் நம்ம சிவா ரொம்ப சாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களே உன் சிநேகிதிகள்?” “அண்ணாச்சி கடையில் கைவளைகளைக் கழற்றி எறிந்து, தேர்தல் மனுவில் கையெழுத்துப் போடத் துணிவு