பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 சத்திய வெள்ளம்

சொன்னதுக்கு ரொம்ப நன்றி தம்பீ!. மேலே ஆக வேண்டியதை நாங்க கவனிக்கிறோம். உன்னை நான் காமிச்சுக் கொடுக்கமாட்டேன். அந்தப் பதினெட்டாம் படிக் கருப்பன், மேல் சத்தியம். இனிமேல் நீ கிளம்பிப் போகலாம். யாராவது பார்த்திடாமே புறப்படு” என்று அந்தக் கான்ஸ்டேபிளுக்கு விடைகொடுத்தார் அண்ணாச்சி.

கான்ஸ்டேபிள் புறப்பட்டுப் போனபின் துரங்கிக் கொண்டிருந்த நாயுடுவை எழுப்பி, “நாயினா! நான் வெளியிலே பூட்டிக்கிட்டு ஒரு முக்கிய வேலையாப் போறேன். நீங்க நிம்மதியாகத் தூங்குங்க. நான் திரும்பி வர்றத்துக்கு நடு ராத்திரி ஆவும் கதவைத் தட்டி உங்கது.ாக்கத்தைக் கெடுக்காம இருக்கணும்னுதான் வெளிலே பூட்டிக்கிறேன்னு சொல்றேன். பிளாஸ்கிலே வெந்நீர் இருக்கு பாத் ரூம் லைட் ஸ்விட்சு உங்க கட்டிலுக்கு மேலே சுவர்லே இருக்கு” என்று அவருக்கு விவரம்கூறிய பின் வெளியேறி வுட்டரைத் தள்ளிப் பூட்டிக் கொண்டு புறப்பட்டார் அண்ணாச்சி. மழைக்குப் பாதுகாப் பாக ரெயின் கோட், குடை டார்ச் லைட், ஆளுயரக் கிளுவைக் கம்பு சகிதம் புறப்பட்டிருந்தார் அவர் லேக் ரோடு சந்திப்பில் போய் அங்கிருந்த பெரிய தபால் தந்தி ஆபிஸ் பொது டெலிபோன் பூத்திலிருந்து வீட்டில் ஃபோன் வசதி உள்ள உள்ளூர் மாணவர்கள் சிலருக்கு ஃபோன் செய்து உடனே தேசிய இளைஞர் சங்கக் கட்டிடத்துக்கு அவர்களை வரச் சொன்னார். ஆளும் கட்சியைத் தவிர மற்ற எல்லா அரசி யல் கட்சிகளையும் சேர்ந்த உள்ளுர்த் தலைவர்களுக்கும் ஃபோன் செய்தார். தொழிற் சங்கப் பிரமுகர்களையும் வரச்சொன்னார். அண்ணாச்சியின் பெரு முயற்சியால் அந்த அடை மழையில் நள்ளிரவில் பல்கலைக் கழக மாணவர்களின் பிரச்னை சம்பந்தமாகத் தேசிய இளைஞர் சங்க மாடியில் ஒரு கூட்டம் நடைபெற்றது. மாணவர் கள்மீது சுமத்தப்பட்டுள்ள பொய்க் குற்றச்சாட்டுக் களையும், பொய் வழக்குகளையும் எதிர்த்துப் போராட வும், நடவடிக்கை எடுக்கவும் சர்வ கட்சியினரும் அடங்கிய செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தச் செயற்குழு