பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 219

மறுநாள் காலையிலேயே துணை வேந்தரையும் ஆர்.டி.ஓ. வையும் தனித் தனியே சந்தித்துப் பேசுவதென்றும் முடிவாயிற்று.

எல்லா முடிவுகளையும் செய்துவிட்டு அவர்கள் கலை யும் போது இரவு ஒரு மணிக்குமேல் ஆகிவிட்டது. தக்க சமயத்தில் எல்லாருக்கும் தகவல் தெரிவித்து ஒன்று சேர்த்துப் பேச வைத்ததற்காக அண்ணாச்சியை அனை வரும் பாராட்டினார்கள்.

மறுநாள் காலையில் முதல் நாளிரவு கான்ஸ்டேபிள் மூலம் இரகசியமாகத் தெரிந்த எல்லாக் குற்றச்சாட்டு களுமே பத்திரிகையில் வந்துவிட்டன. மாணவர்கள் அத்தகைய குற்றங்களில் ஈடுபட்டிருப்பார்கள் என்பதை யாருமே நம்பத் தயாராக இல்லை. அந்தக் குற்றச் சாட்டுக் களும், நடவடிக்கைகளும், திட்டமிட்ட பழிவாங்கல் வேலை என்பது எல்லாருக்கும் புரிந்தது.

காலையில் செய்தியைப் பத்திரிகைகளில் படித்து விட்டுக் கண்ணுக்கினியாளும், சிவகாமியும் அண்ணாச்சி யின் கடைக்கு ஓடி வந்தார்கள். அண்ணாச்சி அவர்களுக் குத் தைரியம் கூறினார். விஷயத்தைக் கேள்விப் பட்டுப் பத்திரிகையிலும் படித்துவிட்டு, “இதென்னப்பா? இரணி யன் ராஜ்யத்திலேகூட இப்பிடி எல்லாம் நடந்திருக்காதே? மகா கொடுமையாவில்ல இருக்கு ?” என்று வருத்தப் பட்டார் நாயுடு.

“நாயினா! இதைவிட இரணியன் ராஜ்யம் ஒருவிதத் திலே நல்லாக்கூட இருந்திருக்கும்! ஏன்னா இரணியன் ராஜ்யத்திலே இரணியன் ஒருத்தன்தான் இரணியனா இருந்திருப்பான். மத்தவங்க அத்தினி பேரும் நல்ல வங்களா இருந்திருப்பாங்க. இப்ப, அதிகாரிகள், சர்க்கார், போலீஸ், நிர்வாகம், கட்சியாட்கள்னு நூற்றுக்கணக்கான இரணியனுகளை ஒரே சமயத்திலே எதிர்கொள்ள வேண்டி யிருக்கு அதுதான் வித்தியாசம்” என்றார் அண்ணாச்சி.

சிறைக்குப் போய்க் காலையில் பாண்டியனையும் மற்ற மூன்று மாணவர்களையும் சந்திப்பதற்காக