பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 221

“அசடே! இதற்காகவே அழுதுவிட்டால் இதைவிடப் பெரிய கொடுமைகளைத் தாங்கும் சக்தியை நீ பெற முடி யாது. நியாயமான கோபத்தோடு வருகிறவர்களிடம் அமைதியையும் சாந்தத்தையும் பற்றிப் பேசுவதும், சாந்தமா கவும், அமைதியாகவும் வருகிறவர்களிடம் அதிகாரமிடுக் கோடு கோபப்படுவதுமாக ஒர் ஆட்சி இங்கே நடக்கிறது. கெஞ்சினால் மிஞ்சுவது, மிஞ்சினால் கெஞ்சுவது, பணிந் தால் அதிகாரம் செய்வது, அதிகாரத்தை மதிக்காவிட்டால் பணிவது. இதுதான் இன்றைய நடைமுறை. இதில் பயப் படுகிறவர்களும், அழுகிறவர்களும் ஜெயிக்க முடியாது. மன உறுதியோடு போராட வேண்டும். அந்த மன உறுதி எங்களுக்கு இருக்கிறது. உனக்கும் அது இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.”

இதைக் கேட்டு அவன் மனம் தேறியது. பிஸ்கட் பொட்டலங்களையும், பழங்களையும் கொடுத்துவிட்டு, “இந்த விவரமெல்லாம் தெரியுமுன் நான் உங்களுக்கு நேற்றிரவு எழுதிய கடிதம் இது, ஆஸ்பத்திரியில் இருப்பீர்கள் என்றெண்ணி எழுதினது. முடிந்தால் படியுங்கள். என்னென்னவோ என் மனவேதனைகளை எழுதியி ருக்கிறேன். ஒருவேளை கிறுக்குத் தனமாகக்கூட உங்களுக் குத் தோன்றலாம்” என்று அந்தக் கடிதத்தையும் அவனிடம் எடுத்துக் கொடுத்தாள். அந்தச் சமயத்தில் உடன் வந்தி ருந்த சிவகாமியும், அண்ணாச்சியும் மற்ற மாணவர்களைப் பார்க்கப் போயிருந்தார்கள். ஏதோ மாபெரும் கிரிமினல் குற்றவாளிகளை அடைப்பதுபோல் அங்கே மாணவர் களைத் தனித்தனியே அடைத்திருந்தார்கள். அண்ணாச்சி யும், சிவகாமியும் பாண்டியன் இருந்த சிறைக்கு வந்தபின் கண்ணுக்கினியாள் போய் மற்ற மூன்று மாணவர்களையும் தனித்தனியே பார்த்து அவர்களுக்காக வாங்கி வந்த பொருள்களைக் கொடுத்து ஆறுதலாகப் பேசிவிட்டு வந்தாள்.

அவள் எவ்வளவோ மறைக்க முயன்றும் மோகன் தாஸ், “உங்களுக்கு ரொம்ப மனக்கஷ்டமாக இருக்கும்.