பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 சத்திய வெள்ளம்

அதிகம் அழுதிருக்கிறீர்கள். முகம் வாடியிருக்கிறது, கண் கள் சிவந்திருக்கின்றன. இத்தகைய கோலத்தில் உங்களை நான் சந்தித்ததே இல்லையே?” என்று கேட்டுவிட்டான். இந்தக் கேள்வி மறுபடியும் அவளை அழச்செய்துவிடும் போல் இருந்தது.

“குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கப் போகிற நாங்களே குற்றவாளிகளாக்கப்பட்டுப் பொய்க் குற்றங்களால் ஜோடிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் நிஜக் குற்றவாளி களின் முகமூடி விரைவில் கிழிக்கப்படும். அப்போது வெற்றி மாலைகளோடு நாங்கள் வெளிவருவோம்” என்றான் மற்றொரு சிறைப்பட்ட மாணவன்.

அதற்குள் சிறையில் காவலிருந்த போலீஸ் ஆள் வந்து, நேரமாகிவிட்டது என்று விரட்டவே மீண்டும் பாண்டி யன் அருகே வந்து கண்களில் நீர் மல்க அவனைப் பார்த்தாள் கண்ணுக்கினியாள். அவள் பார்த்தபோது அவன் அவளு டைய கடிதத்தைப் படித்து முகம் மலர்ந்து கொண்டி ருந்தான். எதிரே நிழல் படர்ந்தாற்போல் தெரியவே நிமிர்ந்து பார்த்து, “அழாதே. ஒரு புன்னகையோடு போய் வா. உன் கண்ணிர் எனக்கு நினைவிருப்பதைவிடப் புன்னகை நினைவிருப்பதுதான் தெம்பூட்டும்” என்றான் அவன். அவன் விருப்பப்படி புன்னகை செய்ய முயன்றாள் அவள். அவன் வலது கையை அந்தக் கடிதத்தோடு உயர்த்தி ஆட்டி அவளுக்கு விடை கொடுத்தான். அண்ணாச்சி முதல் நாளிரவு தாம் ஏற்பாடு செய்த செயற்குழு பற்றிய விவரங்களைப் பாண்டியனிடம் சுருக்கமாகச் சொல்லி விட்டு விடைபெற்றார். . . “

சிறைவாசலுக்கு வந்தவுடன் கண்ணுக்கினியாளுக்கு அழுகை வெடித்துக் கொண்டு வந்தது. சிவகாமி அவளை ஆதரவாகத் தாங்கிக் கொண்டாள். “வெளியே மாணவ மாணவிகளை ஒன்று திரட்டிப் போராட வேண்டிய சமயத்தில் நாம் புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது கண்ணுக் கினியாள்! இனிமேல்தான் நமக்கு அதிகமான பொறுப்பும்