பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 சத்திய வெள்ளம்

1967க்குப் பிறகு நவநீத கவி எழுதிய முதல் வசன கவிதைத் தொகுதி அது. அதில் ஒரு கவிதையைப் படிக்கும் போது நான் மனம் நெகிழ்ந்து போய் உங்களையும் என்னையும் பற்றியே நினைத்துக் கொண்டேன். அந்தக் கவிதையில் ‘காதலின் எல்லைகளைக் காணும் வருங்காலக் காதலர் களாக அவர் நினைக்கும் இருவராய் நாம் இருக்கப் போகிறோம் என்று என் மனம் எண்ணிப் பூரித்தது. நீங்களும் அதைப் படிக்க வேண்டும் என்பதற்காகக் கீழே அந்தப் புதிய கவிதையை அப்படியே எழுதியிருக்கிறேன்.

நட்சத்திரங்களும் முழுநிலாவும் எங்களுக்காகவே என்று நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் இங்கே எங்கள் காதலின் வசந்த காலங்கள் கழிந்த பின்னும் அவை எப்போதும்போல வானில் இருந்தன நீலமுகில்களும் மாரிக் காலத்துச் சீதநல் இரவுகளும் எங்களுக்காகவே என்று நாங்கள் நினைத்திருந்தோம் - ஆனால் எங்கள் காதலின் மோகங்கள் தணிந்த பின்னும் அவை எப்போதும்போல இங்கிருந்தன. ரோஜா மலர்களும் சந்தனக் கலவையும் தனியறைகளின் பஞ்சணைகளும் - எங்களுக்காகவே என்று நாங்கள் நினைத்திருந்தோம் - ஆனால் அவை எங்கள் தாகங்கள் தணிந்த பின்னும் எப்போதும் போலப் பூத்தன, மனந்தன, பொலிந்தன, இவ்வுலகில்! எதுவுமே எங்களோடு எங்களால் முடிந்துவிடவில்லை நாங்கள் கழிவிரக்கமும் துயரமுமாய் மலைத்து நிற்கிறோம் காதல் தேவதைகளே! பிரியத்தின் காவற் கடவுளர்களே! வரப் போகிற சந்ததியிலேனும் யாராவது ஓராணும் பெண்ணும் இந்த சுகங்களின் எல்லைகளைக் காண அநுமதியுங்கள் தத்துவங்கள் நிலைப்பதற்காக மனிதர்களை ஏமாற்றாதீர்கள் மனிதர்கள் நிலைப்பதற்கான சுகங்களைத் தாருங்கள்!

இந்தக் கவிதையை மட்டும் அல்லாமல் நவநீத கவி யின் எல்லாக் கவிதைகளையுமே நீங்கள் படிக்க வேண்டும். என் தவிப்புக்களை நான் சொல்வதைவிட நவநீத கவியின் கவிதை மூலம் அதை நான் சுலபமாக உங்களுக்குச்