பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 227

சொல்லிவிட முடிகிறது. நாமெல்லாரும் சேர்ந்து உண்ணா விரதம் இருந்தோம். எங்களை மட்டும் ஆஸ்பத்திரியி லிருந்து விடுவித்து விட்டார்கள். அப்பா நவராத்திரிக்காக என்னை ஊருக்கு அழைத்துப் போக வந்திருக்கிறார்கள். நல்லவேளையாக மலைச் சரிவால் பஸ் போக்குவரத்து நின்று பிரயாணம் தடைப்பட்டு விட்டது. எங்கே உங்களைப் பார்த்துச் சொல்லி விடைபெற முடியாமல் ஊருக்குப் போக நேரிட்டு விடுமோ என்று பயந்தேன். என் விருப்பப் படியே பிரயாணம் தடைப்பட்டுவிட்டது.

இன்று விடிந்ததும் தான் வேறு குற்றச் சாட்டுக்களை ஜோடித்து உங்களையும் மற்ற மூன்று மாணவர்களையும் ஆஸ்பத்திரியிலிருந்து சிறைச்சாலைக்கு மாற்றியது எனக்குத் தெரியும். அந்த விவரம் தெரிந்த பின்பே இந்தப் பகுதியை மறுபடி எழுதுகிறேன். பதறிப் போனேன். என் வேதனையை உங்களுக்கு நான் எப்ப்டி உணர்த்துவது என்றே தெரியவில்லை. இந்த நிலையில் சாலைப் போக்கு வரத்து ஒழுங்காகி மதுரைக்குப் பஸ் போகும் என்கிற நிலை வந்தாலும் உங்களை விட்டுவிட்டுப் போக எனக்கு மனம் இல்லை. என் மனத் தவிப்பு நாயினாவுக்குப் புரியாது. அண்ணாச்சிக்கு ஒரளவு புரியும். அவர்தான் நேற்று இரவோடு இரவாக நகரின் சர்வ கட்சிப் பிரமுகர்களையும் சந்திக்க வைத்து இந்தப் பொய்க் குற்றச்சாட்டுக்களை எதிர்த்துப் போரிட ஏதோ ஏற்பாடு செய்து கொண்டி ருக்கிறார். நானும் மாணவ-மாணவிகளைச் சந்தித்து உண்மையை விளக்கி அவர்களை ஒன்றுபட்டு இணைத்து போராடச் செய்யப் போகிறேன். மாணவர்கள் மேல் உள்ள பொய் வழக்குகள் திரும்பப் பெறப்படுகிறவரை எங்கள் போராட்டம் ஓயாது. எங்கள் போராட்டம் வெற்றி பெற்று நீங்கள் வெற்றி மாலைகளுடன் சிறையிலிருந்து விடுதலை பெற்று வரப்போகிறீர்கள். உங்களை நேரில் பார்க்க முடியுமோ, முடியாதோ, எப்படியும் அண்ணாச்சி மூலம் இந்தக் கடிதத்தை உங்களுக்குக் கிடைக்கச் செய்ய லாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மறுபடியும்: