பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 21

“மிஸ்டர் ! ஒண்ணு, இதில் கையெழுத்துப் போட்டுக் குடுங்க. அல்லது இந்த வளையல்களைக் கையிலே போட்டுக் கொண்டு வெளியில் புறப்படுங்கள்” என்று அவன் முன் அவள் வளையல்களை எறிந்தபோது ஒரே கைதட்டலும், சிரிப்பொலியும், விசில்களும் எழுந்தன. பாண்டியனுக்கு நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலிருந்தது. அவள் செய்த காரியம் அவனை ஒரளவு அவமானப் படுத்திவிட்டாலும் அவளது அந்தத் துணிச்சல் வியப்புக் கொள்ளக் கூடியதாக இருந்தது. உதட்டைக் கடித்துக் கொண்டு மறுபேச்சுப் பேசாமல் தலையைக் குனிந்த நிலையிலிருந்து நிமிராமலே அந்தத் தாளில் சுபாஷ் சந்திர பாண்டியன் என்னும் எஸ்.சி. பாண்டியன், இரண்டாவது ஆண்டு பி.ஏ. என்பதற்கு நேரே கையெழுத்திட்டு முன் மொழிந்து எழுதியிருந்த மாணவனிடம் அதைக் கொடுத் தான் பாண்டியன். அவன் இணங்கியதைப் பாராட்டும் வகையில் மீண்டும் கரஒலி எழுந்தடங்கியது. அவளோ இப் போது ஒரு குழந்தையின் உற்சாகத்தோடு கைத் தட்டுவதை அவன் கவனித்தான். அண்ணாச்சியும் உள்ளே வந்து அவனைக் கட்டித் தழுவிப் பாராட்டுத் தெரிவித்தார். அந்தக் குழுவின் அப்போதைய மகிழ்ச்சி எல்லையற்றதா யிருந்தது.

சிறிது நேரத்தில் மாணவர்கள் ஒவ்வொருவராகச் சொல்லிக் கொண்டு புறப்பட்டார்கள். மாணவிகளில்கூட இரண்டு மூன்று பேர் போய்விட்டார்கள். பாண்டியனுக்கு நெருக்கமான சில மாணவர்களும், அந்தக் கண்ணுக்கினி யாளும், அவளுடைய சக மாணவி ஒருத்தியுமே அங்கே மீதமிருந்தனர். நண்பன் ஒருவன் பாண்டியனின் காதருகே மெதுவாகச் சொன்னான்:

“ஒரு காலத்திலே மதுரையில் டிராமா கம்பெனி நடத்திய பிரபல கந்தசாமி நாயுடுவின் மகள், மதுரை யிலேயே பி.யு.சி. முடித்துவிட்டு நம்ம பல்கலைக்கழகத்தில் ஃபைன் ஆர்ட்ஸ் ஃபேகுல்டியில் டிப்ளமா இன் டிராமா’ படிக்க வந்திருக்கிறாள். பெயர் கண்ணுக்கினியாள். நம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/23&oldid=609337" இலிருந்து மீள்விக்கப்பட்டது