பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 சத்திய வெள்ளம்

காரணமான விரிவுரையாளர் மேல் நடவடிக்கை எடுத்து அவரை நீக்கினார்கள். சிறைபட்டிருந்த பாண்டியன் முதலிய மாணவர்கள் விடுதலை பெற்றனர். அண்ணாச்சி யிடம் இருந்த மேரிதங்கத்தின் கடிதம் இரகசியமாக மணவாளனுக்கு அனுப்பப்பட்டு மணவாளன் அதைப் புகைப்படப் பிரதி செய்து சில பத்திரிகைகளில் பிரசுரம் செய்யக் கொடுத்திருந்ததனால் அந்த விவரம் பகிரங்க மாகித்தான் போராட்டமே நாடளாவியதாக வளர்ந்தி ருந்தது. ஆகவே அமைச்சர் முயன்றும் அதை மூடி மறைக்க முடியாமல் போய்விட்டது.

விடுதலையான தினத்தன்று பாண்டியன் முதலிய மாணவர்களை வரவேற்கச் சிறை வாயிலில் ஏராளமான மாணவர்கள் கூடியிருந்தனர். கழுத்துத் தாங்க முடியாத அளவு மாலைகள் குவிந்தன. அவனும் சகமாணவர்களும் விடுதலையான தினத்துக்கு மறுநாள் காலைதான் கண்ணுக்கினியாளும் அவள் தந்தையும் ஊருக்குப் புறப்பட்டார்கள். விடுமுறையே இன்னும் ஒருவாரம்தான் இருந்தது. ஆனாலும் தேடிவந்த தந்தையை ஏமாற்றாமல் ஊர் சென்று திரும்புவதற்காகவே அவள் புறப்பட்டி ருந்தாள். பாண்டியன் விடுதலையான தினத்தன்று மாலை அண்ணாச்சி கடையில் கண்ணுக்கினியாளையும் அவள் தந்தையையும் தனியே சந்திக்க நேர்ந்தது. கண்ணுக் கினியாளும், அண்ணாச்சியும் அவனைப் பற்றி நாயினா விடம் பெருமையாகச் சொல்லி அறிமுகப்படுத்தி வைத் தார்கள். நாயினா அவனைக் கேட்டார்:

“தம்பீ! லீவுக்கு ஊருக்குப் போகலியா?” “போகணும்! லீவே ஏறக்குறைய முடிஞ்சு போச்சு. இருந்தாலும் நாளைக்குப் புறப்படலாம்னு இருக்கேன். நானும் மதுரை வந்துதான் போகணும்.”

“அப்பிடியானா வீட்டுக்கு வந்துட்டுப்போ தம்பீ! சித்திரக்காரத் தெருவிலே நம்ம வீடு இருக்கு டிராமாக்கார நாயுடு வீடுன்னா யாரும் சுலபமா அடையாளம் காட்டு வாங்க."