பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 சத்திய வெள்ளம்

வற்றிலும் குறைவான ஆனால் அரசாங்க மேலிடம் விரும்புகிற வேறு இருவரை நியமிக்க வேண்டும் என்று துணை வேந்தர் கூறியபோது, ஹரிகோபால் மீண்டும் குறுக்கிட்டார். காரசாரமான விவாதம் எழுந்தது. எஸ்டேட் அதிபரும் சிண்டிகேட் உறுப்பினருமான ஆனந்தவேலு குறுக்கிட்டுத் தந்திரமாக ஹரிகோபாலை ஆதரிப்பதுபோல் கூறினார். இதில் ஹரிகோபாலை ஆதரித்தால் மந்திரிக்கு டாக்டர் பட்டம் வழங்கும் பிரச்னையில் ஹரிகோபால் தம்மை ஆதரிப்பார் என்று எண்ணியே அப்படிச் செய்தி ருந்தார் அவர். ரீடர் நியமனம் தகுதி உள்ளவர்களுக்குக் கிடைக்க வழி பிறந்தது. அடுத்தபடி தபால் மூலம் பட்டப் படிப்புக்கான கரெஸ்பாண்டென்ஸ் கோர்ஸ் தொடங்கு வது பற்றிய பிரச்னை விவாதிக்கப்பட்டது. ஒரு முடிவுக்கு வர இயலாததால் அந்த யோசனை பற்றி அடுத்த சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுப்பது என்று ஒத்திப்போடப் பட்டது. மூன்றாவதாகப் புதிய கட்டிடங்கள் பற்றியும் வேறு சில முக்கிய நிர்வாக அம்சங்கள் பற்றியும் பேசப்பட்டது.

நான்காவதாகவும், இறுதியானதாகவும் அஜெண்டா வில் இருந்த கான்வகேஷனும் கெளரவப் பட்டங்களும் என்ற அயிட்டத்தைப் பகல் உணவுக்குப் பின் பிற்பகல் கூட்டத்தில் பேசலாம் என்று அறிவித்தார் துணைவேந்தர், பிற்பகலில் நிறையச் சாதகமாக எடுத்துச் சொல்லி அந்தத் தீர்மானத்தை ஒருமித்து நிறைவேற்றி விடலாம் என்பது அவரது எண்ணமாயிருந்தது. எல்லாரும் பகல் உணவுக் காகக் கலைந்து போகும்போது “எல்லா வருஷத்தையும் விட இந்த வருஷம் கான்வகேஷன் தள்ளிப் போவதைப் பார்த்தால் ஏதோ விசேஷம் இருக்கும் போலிருக்கிறது” என்று மிஸஸ் செரியன் உடன் வந்த மற்றோர் உறுப் பினரிடம் வாயளப்பாகப் பேசிப் பார்த்தாள். “நீங்கள் எல்லாரும் ஒத்துழைத்தால் எல்லாம் விசேஷமாக முடிய வழி உண்டு” என்று சிரித்துக் கொண்டே மிஸஸ் செரியனுக்கு மறுமொழி கூறினார் அந்த உறுப்பினர். மிஸஸ் செரியன் பிடிகொடுத்துப் பேசாமல் நழுவியதும் அந்த உறுப்பினர்