பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 245

ஏதாவது மறுப்புத் தெரிவிக்க ஏற்பாடு செய்யலாம்” என்று பாண்டியன் கூறியதும் “நாலைந்து பேராக இப்போதே ஒரு வாடகைக் காரில் மதுரைக்குப் புறப்படலாம். போகும் போது நிலக்கோட்டையில் பிச்சைமுத்து சாரையும் பார்ப்போம்” என்று கதிரேசன் குறுக்கிட்டான். பாண்டி யனுக்கும் பிச்சை முத்துவைப் பார்க்கும் ஆவல் இருக்கவே, அதற்கு இணங்கினான். அவர்கள் உடனே அண்ணாச்சி கடைக்குப் போய்ச் சொல்லிக் கொண்டு, கதிரேசன் ஏற்பாடு செய்த டாக்சியில் மதுரைக்குப் புறப்பட்டார்கள். ஐந்து மாணவர்கள் சேர்ந்து சென்றதனால் இரவு நேரப் பயணத்தில் அலுப்புத் தெரியவில்லை. அவர்கள் நிலக் கோட்டையை அடையும்போது இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகியிருந்தது. கதிரேசன் பிச்சைமுத்துவின் வீட்டுக்கு வழி சொல்லி அழைத்துக் கொண்டு போனான். இந்தப் பயணத்தில் மோகன்தாஸ் தங்களுடன் வரமுடியாமல் விடுதலையான தினத்தன்றே ஊருக்குப் போயிருந்தது பாண்டியனுக்குக் கை ஒடிந்த மாதிரி இருந்தது.

அவர்கள் சென்றபோது பிச்சைமுத்து வீட்டில்தான் இருந்தார். மாணவர்களை அன்போடு வரவேற்றார். பாண்டியன் முதலிய மற்ற நான்கு மாணவர்களையும் அவருக்கு அறிமுகப்படுத்தினான் கதிரேசன். அந்த நேரத் துக்கு மேல் அவர்களுடைய இரவு உணவுக்கு ஏற்பாடு செய்து உபசரித்தார் பிச்சைமுத்து. இரவு பதினொரு மணிக்கு மேல் அவர்கள் தொடர்ந்து மதுரைக்குப் பய ணம் செய்ய விரும்பிய போது, “தூக்கத்தையும் கெடுத்துக் கொண்டு இந்த அகாலத்தில் பயணம் செய்ய வேண்டாமே? இப்போது அவசரம் என்ன? காலையில் ஐந்து மணிக்கு எழுந்து புறப்படலாம்” என்று பிச்சை முத்து யோசனை கூறினார். அவர்களுக்கும் அது சரி என்று தோன்றியது. அமைச்சர் காரியமாணிக்கத்துக்கு வரப்போகிற பட்ட மளிப்பு விழாவின் போது கெளரவ டிலிட் தர சிண்டிகேட் முடிவு செய்திருப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டபோது பிச்சைமுத்து சிரித்தார். மேலும், அவர் கூறினார்: “எதை