பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 சத்திய வெள்ளம்

தினசரியைப் படித்துக் கொண்டிருந்தார். மாணவர்களைப் பார்த்ததுமே, “வாருங்கள்! இப்போதுதான் அமைச்சர் கரியமாணிக்கத்துக்குக் கெளரவ டாக்டர் பட்டம் கொடுக்க யூனிவர்ஸிடி சிண்டிகேட் முடிவு செய்திருக்கும் செய்தியைப் படித்துக் கொண்டிருந்தேன். உடனே நீங்களும் வந்து விட்டீர்கள். பெறுகிறவருக்கு இது கெளரவமாயிருக்கலாம். ஆனால் டாக்டர் பட்டத்துக்கு இது பெரிய அகெளரவம்.” என்று குமுறலோடு வரவேற்றார் மணவாளன். எல்லோருக் கும் காப்பி வரவழைத்து அருந்தச் செய்தபின் நகரின் வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர் தலைவர்களையும் தம் வீட்டுக்கு வரவழைத்தார் அவர் பிரச்னையை எல் லோரும் கலந்து பேசி விவாதித்தார்கள். நீராடி உடை மாற்றிக் கொண்ட பின் பகலுணவுக்கு அவர்கள் வெளியே புறப்பட்டபோது மணவாளன் தடுத்து வீட்டிலேயே சாப்பிடச் செய்தார். பிற்பகலிலும் அவர்கள் தொடர்ந்து விவாதித்தார்கள்.

மாலை ஐந்து மணிக்கு மணவாளனையும் தன்னோடு கண்ணுக்கினியாளின் வீட்டுக்கு அழைத்தான் பாண்டி யன். தன்னைச் சுற்றி நிறைய மாணவர்கள் இருந்ததனால், “நீ மட்டும் போய்விட்டு வந்துவிடு, பாண்டியன்! நான் இவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன்” என்றார் மணவாளன். மணவாளனின் வீடு இருந்த மேலச் சந்தைப் பேட்டைத் தெருவிலிருந்து நடந்தே சித்திரக்காரத் தெருவுக்குப்போய்ச் சேர்ந்தான் பாண்டியன். நாயுடுவின் வீட்டைக் கண்டுபிடிப்பது சுலபமாக இருந்தது. அவன் அந்த வீட்டில் நுழைந்து முன்வராந்தாவில் செருப்பைக் கழற்றி விட்டுக் கூடத்தில் அடி எடுத்து வைத்தபோது பல்கலைக் கழகத் தோற்றத்திலிருந்து மாறிய புது அழகோடு கொலுப் பொம்மை வரிசைகளுக்கு முன் அமர்ந்திருந்தாள் கண்ணுக் கினியாள். கருநாகமாய்ச் சரியும் கூந்தற் பின்னலும் அதன் மேல் சரிந்த மல்லிகைக் கொத்துமாக அவள் முதுகுப் புறமும் இடையின் பொன் வண்ணமும் தெரிந்து அவனை முதற் பார்வையிலேயே மயக்கின. கொலுவின் கீழே இருந்த