பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 251

படி ஒரமாக எதிரே நின்றவாறே பேசிக்கொண்டிருந்தாள் கண்ணுக்கினியாளின் தாய்.

“அந்த நாளிலே பாரு. அறை ரூபாய்க்கு கொத்துக் கடலை வாங்கி வேகவச்சா. கொலுவுக்கு வாரவங்க போறவங்களுக்குக் கொடுத்ததுபோக அதுக்குப் பெறகும் பத்துப் பேர் சாப்பிடறாப்பில மீந்து கிடக்கும். இப்ப எ ன் ன டான் னா எத்தினி ரூபாய் கொடுத்து எது வாங்கினாலும் காணாமப் போகுது. பத்தமாட்டேங்குது. பண்டமும் காண்லே, ரூவாயும் காணலே, எல்லாமே ஆனைவெலை குதிரை வெலை விக்கிது. ஒத்த ரூவாயைக் கொடுத்துப் பதினாறுபடி அரிசி வாங்கின கையாலே இப்பப் பதினாறு ரூவாயைக் கொடுத்து ஆறுபடி அரிசி வாங்க வேண்டியிருக்கு விலைவாசி ரொம்பக் கொடுமையா ஏறிப்போச்சு தம்பீ!.

“அதான் ரூபாய்க்கு மூணுபடி அரிசி தரோம்னு தெருவெல்லாம் கத்தினாங்க, சுவரெல்லாம் எழுதினாங்க. அதைப் பார்த்துத்தானே நீங்க ஒட்டெல்லாம் போட்டீங்க..” தட்டில் சிற்றுண்டியோடு வந்த கண்ணுக்கினியாள், “வீட்டுக்குள்ளே வந்ததும் வராததுமா இவரிடம் விலை வாசி ஏற்றத்தைப் பற்றிப் பேசாதே அம்மா! உடனே ஒடிப் போயிடப் போறாரு நாலஞ்சு வருஷமா நீ எல்லாரிட்ட வும் பேசிட்டிருக்கிற ஒரே விஷயம் இதுதான்னு இவருக்குத் தெரியாது. இவருக்காகவே பேசறயோன்னு தோணும். தப்பா நினைக்கப் போறாரு...” என்று தாயிடம் சொல்லி விட்டுப் பாண்டியன் பக்கம் திரும்பி,

“உங்களுக்குத் தெரியுமோ?. விலைவாசிகள் ஏறியிருப் பதைப் பற்றி எங்க அம்மாவிடம் இருக்கிற புள்ளி விவரங் களைப் பயன்படுத்தினால் அப்படிப் பயன்படுத்துற கட்சி வருகிற தேர்தலிலே நிச்சயமா ஜெயிச்சிடும். என்று சொல்லிச் சிரித்தாள் அதைக் கேட்டுப் பாண்டியனும் முகம் மலர்ந்தான்.

“கொஞ்சம் தைரியமாகச் சொல்லலாம் என்றால் இன்றைக்குப் பல எதிர்க்கட்சிகளிடம் இருக்கிற புள்ளி