பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 சத்திய வெள்ளம்

காப்பி வந்தது. பாண்டியனும், நாயினாவும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கண்ணுக்கினியாள் காலை யில் செய்தித் தாளில் படித்த டாக்டர் பட்ட விவகாரம் நினைவுக்கு வந்து அதைப் பற்றிப் பாண்டியனிடம் விசாரித் தாள். மணவாளனையும், வேறு மாணவர் தலைவர் களையும் கலந்து பேசி எப்படிப் போராடுவது என்று யோசித்துக் ாெகண்டிருப்பதாகப் பாண்டியன் அவளுக்கு மறுமொழி கூறினான். அப்போது கொலுவுக்காக நாலைந்து பெண்கள் அடங்கிய ஒரு கூட்டம் வீட்டுக்குள் நுழையவே கண்ணுக்கினியாளும் அவள் தாயும் அவர்களை வரவேற்றுக் கொலுவுக்கு முன் அழைத்துச் சென்றார்கள். “நீ மாடிக்கு வா, தம்பீ! நாம் அங்கே போயிப் பேசலாம். இனிமே இங்கே பொம்பிளை ராஜ்யம் ஆரம்ப மாயிடும்.” என்று பாண்டியனை மாடிக்கு அழைத்துக் கொண்டு போனார் நாயுடு.

“ராத்திரி இங்கேயே சாப்பிடலாம். உனக்கு அவசரம் ஒண்னுமில்லியே தம்பி?” என்று நாயுடு கேட்ட போது பாண்டியன் சற்றே தயங்கினான். .

“கொஞ்சம் நேரம் பேசிக்கிட்டிருக்கலாம். சாப்பாடு இன்னொரு நாளைக்கி வைச்சுக்கலாம். இன்னிக்கி வேண்டாம். எட்டரை மணிக்குள்ளே நான் மறுபடியும் மணவாளன் வீட்டுக்குப் போகணும். அங்கே நெறைய ‘ஸ்டுடன்ஸ்’ வந்து காத்திருப்பாங்க..”

“எல்லாம் போகலாம், தம்பீ! சாப்பிட்டுப்பிட்டு அப்புறம் போயேன். நான் விட்டாலும் கண்ணுவிடாது. சாப்பிடாமே நீ இங்கிருந்து போக முடியாது.”

சம்மதிப்பதைத் தவிர வேறு வழியின்றி அவன் மெளனம் சாதித்தான்.

அந்த மாடிப் பகுதி ஒர் அறையாக இல்லை. நீண்ட கூடமாக இருந்தது. நடுவே மேஜை நாற்காலிகள் இருந்தாலும் கூடத்தின் நான்கு சுவரோரங்களிலும், மர அலமாரிகளிலும் பலவிதமான நாடகப் பண்டங்கள் வைக்கப் பட்டிருந்தன.