பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 - சத்திய வெள்ளம்

அவனுக்கும் அவனோடு மீதமிருந்த சில மாணவர் களுக்கும், அண்ணாச்சி பையனை அனுப்பி எதிர் வரிசையிலிருந்த டீக் கடையிலிருந்து தேநீர் வரவழைத்துக் கொடுத்தார். அவர்கள் தேநீர் குடித்துக் கொண்டிருந்த போதே ஒர் ஆள் வந்து, “சார், ஹேண்ட்பில்ஸ் பத்தாயிர மும் அடிச்சாச்சு” என்று ஒரு பெரிய பாக்கெட்டைக் கொண்டு வந்து அண்ணாச்சிக்கு முன்னால் வைத்தான். அண்ணாச்சி பாக்கெட்டைப் பிரித்து அவனுடைய தேர்வுக்கு வாக்குகளை வேண்டும் அந்த முதல் நோட்டிஸை அவனிடமே வழங்கினார். அவன் திகைப்பு அடங்கு வதற்குள்,

“தம்பீ! மன்னிச்சுக்குங்க. நீங்க சம்மதிப்பீங்கன்னு நம்பி நானும் உங்க சிநேகிதன்மாருங்களுமாகச் சேர்ந்து, முந்தா நாளே நோட்டீஸ், போஸ்டர் எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணிட்டோம்” என்று சொல்லிச் சிரித்தார் அண்ணாச்சி.

இரண்டாவது அத்தியாயம்

பல்கலைக் கழகம் வந்தபின் மல்லிகைப் பந்தல் நகரமே ஒரளவு பெரிதாகியிருந்தது. பல ஆண்டுகளுக்கு முன் விமான விபத்தில் மறைந்த மல்லிகைப் பந்தல் கல்லூரி நிறுவனர் பூபதி அதை நிறுவியபோது அது என்றாவது ஒரு நாள் பல்கலைக்கழகமாக வேண்டும் என்ற இலட்சியத்தோடுதான் நிறுவியிருந்தார். அந்தக் கனவு இன்று நனவாகியிருந்தது. பூபதி மறைந்தபின் மஞ்சள்பட்டி ஜமீன்தார் அந்தக் கல்லூரி நிர்வாக போர்டின் தலைவராக வந்தார். ஜமீன்தார் ஒரு பெரிய கள்ளநோட்டு வழக்கில் சிக்கிச் சிறை செல்ல நேர்ந்தபின் அரசாங்கமே குறுக்கிட்டு நிர்வாக போர்டின் மீதுள்ள பல குற்றங்களை விசாரணை செய்து அதைக் கலைத்துவிட்டு மூவர் கொண்ட ஒரு குழு வைக் கல்லூரி ஆட்சிப் பொறுப்புக்காக நியமித்தது. அந்த ஆண்டிலேயே மல்லிகைப் பந்தல் கல்லூரியைப் பார்வை யிட வந்த யுனிவர்ஸிடி கிராண்ட்ஸ் கமிஷன் அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/26&oldid=609404" இலிருந்து மீள்விக்கப்பட்டது