பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 சத்திய வெள்ளம்

தலைமுறை மனிதருக்குரிய சிரத்தையுடன் ஒவ்வொன்றாக விசாரித்தார் நாயுடு. அவனும் சலிக்காமல் எல்லாவற்றுக் கும் பதில்கள் சொன்னான். பேசிக் கொண்டிருக்கும் போதே கீழே கொலுவில் கண்ணுக்கிணியாளின் இனிய குரல் அசாவேரி ராக கீர்த்தனை ரா ராம இண்டி தாக ஒலிக்கத் தொடங்கியது. ராமா நீ விட்டுக்கு வரவேண்டும்’ என்று அர்த்தமுள்ள அந்தக் கீர்த்தனையை ஏன் அப் போது அவள் தேர்ந்தெடுத்துப் பாடினாள் என்று நினைத் துச் சிரித்தபோது அந்த நினைப்புக்கும் சிந்தனைக்கும் உல்லாசமான அநுமானம் ஒன்று பதிலாகக் கிடைத்துப் பாண்டியனைப் பூரிக்கச் செய்தது. தான் அன்று மாலையில் அந்த வீட்டுக்கு வந்திருப்பதைக் கொலுவில் பாடி சங்கீதத் தின் மூலமாகவும் அவள் வரவேற்பது அவனுக்குப் புரிந்தது. “எல்லா வீட்டிலேயும் கொலுவுக்கு வர்றவங்க பாடு வாங்க. கொலு வச்சிருக்கிறவங்க வர்றவங்களைப் பாடச் சொல்லிக் கேட்டுத் தொந்தரவு பண்ணுவாங்க... நம்ம கண்ணுவுக்கு நல்லாப் பாட வரும்கிறதுனாலே எல்லாமே இங்கே நேர்மாறா நடக்குது. வர்றவங்க நச்சரிச்சு இதைப் பாட வச்சுக் கேட்டுப்பிட்டுப் போறாங்க” என்றார் நாயுடு, பாடி முடித்த பின்னும் வெகு நேரம்வரை அந்த இனிய குரலும் அதைவிட இனிய அர்த்தமும் பாண்டியன் செவி களிலும் உள்ளத்திலும் ஒலித்துக் கொண்டே இருப்பது போல் தோன்றியது.

கீழ் விட்டில் கொலுவுக்கு வந்து போகிறவர்களின் நட மாட்டம் குறைந்ததும் கண்ணுக்கினியாள் மாடிக்கு வந்து அவர்களைச் சாப்பிட அழைத்தாள். சாப்பாடு முடிந்து சிறிது நேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த பின் அவன் எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டான்.

“லீவு முடிஞ்சு மறுபடியும் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படறப்ப வந்திட்டுப் போ தம்பீ.” என்றார் நாயுடு. வாயில் வரை அவள் மட்டும் வழியனுப்ப வந்தாள். அவன் மெல்லிய குரலில் அவளைக் கேட்டான்: