பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 261

வில்லை. அவர் கொடுத்திருந்த புத்தகங்கள் வேறு அவனுக்கு அவரை ஓரளவு அடையாளம் காட்டியிருந்தன. இளமைத் துடிப்பும், சுறுசுறுப்பும் அந்த நூல்களின் மேல் ஒரு பற்றையும் கவர்ச்சியையும் ஊட்டி அவனைக் காந்தம் போல் இழுத்தன. அவன் அதை இன்னும் பலருக்குப் படிக்கக் கொடுத்து அவர்கள் மனத்தையும் அந்த நூல்கள் கவர்ந்து வசீகரிக்கப்படுவதை ஆவலோடு எதிர்பார்க்கும் அளவு அவற்றில் ஒரு மயக்கமே அடையத் தொடங்கி யிருந்தான்.

இருபத்தோராவது அத்தியாயம்

மாணவ சமுதாயத்தின் மேல் தாம் கொண்டிருக்கும் மனப்பூர்வமான அன்புடனும் அக்கறையுடனும் அப்போது அவர்களிடத்தில் பிச்சைமுத்து பேசினார்.

கதிரேசனும் பாண்டியனும் அப்போது பிச்சைமுத்து வையும் தங்களோடு மணவாளனின் வீட்டுக்கு வருவாறு அழைத்தார்கள். தம்முடைய பள்ளித் தலைமை ஆசிரிய ரோடு வந்திருப்பதாலும் அவர் கடைக்குள்ளே தமக்காகக் காத்திருப்பதாலும் தாம் அப்போது அவர்களோடு மண வாளனின் வீட்டுக்கு வரமுடியாமலிருப்பதற்கு வருந் தினார் பிச்சைமுத்து. மாணவர்கள் இருவரும் அவரை அதற்குமேல் வற்புறுத்த விரும்பவில்லை.

மேலக்கோபுர வாசலில் பிச்சைமுத்துவிடம் விடை பெற்றுக் கொண்டு அவர்கள் இருவரும் மணவாளனின் வீட்டை அடைந்தபோது இரவு ஒன்பது மணிக்கு மேலாகி விட்டது. மணவாளன் வீட்டு மொட்டை மாடியில் நூறு மாணவர்களுக்கு மேல் வந்து கூடியிருந்தனர். பண்டியன் தாமதமாக வந்ததற்காக மணவாளன் அவனைக் கோபித் துக் கொண்டார். கதிரேசன் வழியில் எதிர்பாராதவித மாகப் பிச்சைமுத்துவைச் சந்திக்க நேர்ந்ததை மணவாளனி டம் கூறினான். -