பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 269

நீ, நான் என்று ஒருமையில் பேசுகிறவள் திடீரென்று மரியாதைப் பன்மையில் குளியுங்க என்றதும், இயல்பை மீறி வெட்கப்பட்டதும் அவனுக்குப் புதுமையாயிருந்தன.

சின்ன வயதில் ஒரு சமயம் இந்தக் கருப்பாயி வாய்த் துடுக்கோடு நீளமூக்குப் பாண்டி’ என்று தன் மூக்கு நீளமாயிருப்பதை நையாண்டியாக நாலைந்து வேறு தெருச் சிறுமிகளையும் உடன் வைத்துக் கொண்டு, கேலி செய்த போது அவளைத்தான் ஒடஒட விரட்டிக் கன்னத்தைத் திருகியிருப்பதை நினைத்துக் கொண்டான் பாண்டியன். இப்போது அவள் மிகவும் அந்நியமாக நடந்து கொண்ட விதம் அவனுக்குப் புரியாத புதிராகவே இருந்தது.

குளித்துவிட்டு உள்ளே சென்று கைக்குக் கிடைத்த ஒரு கைலியைக் கட்டிக்கொண்டு, கை வைத்த கலர் பனியன் ஒன்றையும் போட்டுக் கொண்டபின் வேண்டும் என்றே அவன் மீண்டும் கிணற்றடிக்குப் போனான். கருப்பாயி குடத்தின் கழுத்தில் கயிற்றைச் சுருக்குப் போட்டுக் கொண்டிருந்தாள். “என்னது. கருப்பாயி...? நீ அப்பிடிப் பயந்துக்கிட்டு ஒடினதை நினைச்சா சிரிப்பு வருது எனக்கு ! ரொம்ப நாளைக்கு முன்னே நீளமூக்குப் பாண்டின்னு சொல்லிப்பிட்டு நான் துரத்தறப்ப ஒடற மாதிரியில்லே ஒடினே..?” என்று பேச்சுக் கொடுத்தான் அவன். அவள் சிரித்தாள். அவனை நேருக்குநேர் ஏறிட்டுப் பார்க்கப் பயந்தாற்போல் கிணற்றில் இறங்கும் குடத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

“வீட்டிலே எல்லாரும் மொளவா எடுக்கப் போயிட் டாங்க போலிருக்கே? எங்ஙனே மதியத்துக்குச் சாப்பிடப் போlங்க...? எங்க வீட்டுக்கு வாரீங்களா?” என்று அவன் முகத்தைப் பாராமலே கேட்டாள் அவள்.

“நீ கேட்டதிலேயே பசி ஆறிப் போச்சு தாயே! அருமையான கம்பங்களியும் தயிரும். வயித்திலே அப்படியே இருக்கு. முக்குக் கடையிலே ஒரு டீ குடிச்சிப் போட்டு நானும் மொளகாத் தோட்டத்துக்குப் போறேன்