பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 சத்திய வெள்ளம்

ஆத்தா.” வேண்டுமென்றே அவளைச் சண்டைக்கு இழுப் பதற்காக உள்ளூர் வழக்கமான ஆத்தா, தாயே போன்ற மரியாதைச் சொற்களைப் போட்டுப் பேசினான் அவன். அவள் சகஜமாகத் தன்னை நீ உன்னை என்று ஒருமையில் பேசாமல் திடீர் மரியாதை கொடுத்ததற்குப் பழி வாங்கு வது போலவே அவன் பேசியது அமைந்திருந்தது. ஆனால் அந்தக் கிண்டலையெல்லாம் அவள் புரிந்து கொண்ட தாகவே காண்பித்துக் கொள்ளவில்லை.

“காலேசிலே படிக்கிறவுகளுக்கு, மொளவாத் தோட்டத் துலே என்ன வேலை.?” என்று திரும்பிப் பார்த்துக் கேட்டு விட்டு வெளேரென்று அழகான பல்வரிசை தெரியச் சிரித்தாள் கருப்பாயி,

“ஆமா... நீ இப்பல்லாம் பருத்தி எடுக்கப் போறதில்லையா?”

“வயசுக்கு வந்தப்புறம் ஐயா போவக்கூடா தின்னிட் டாக...” இதையும் எங்கோ பார்த்தபடிதான் சொன்னாள் அவள். சொல்லிவிட்டுச் சிறிது தயங்கி நின்றபின், “நான் வாரேன்” என்று போய்ச் சேர்ந்தாள். அவளுடைய மாறுதல்களும், புதிய மரியாதைகளையும், புதிய வெட்கங் களையும் அடைந்திருந்த பருவம் இரசிக்கத் தக்கவையாக இருந்தன. தெரு முக்குக் கடையில் டீ குடித்துவிட்டு மிளகாய்த் தோட்டத்துக்குப் புறப்பட்டான் பாண்டியன். இருபுறமும் இடையிடையே கொத்துமல்லி பயிரிட்டு வளர்த்திருந்த சின்னப் பருத்திச் செடிகளின் நடுவே ஒற்றை யடிப் பாதையில் நடந்து செல்லும் அநுபவம் சுகமானதாக இருந்தது. பருத்தி பூத்திருந்த அழகும் கம்மென்று பச்சைக் கொத்துமல்லி மணந்த மணமும் இதமான உணர்வைத் தந்தன. பருத்திக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டொரு கிராமத்துப் பெண்கள் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு மறுபடியும் தங்கள் வேலைகளில் ஈடுபட்டார் கள். மல்லிகைப் பந்தலின் மலைவளமும், ஈரமும், குளிர்ச்சி யும் அளித்த மந்தமான சுகத்தைவிட இந்தக் கரிசல் காட்டு வெப்பமும், செவற்காட்டுச் செம்மையும், மண்வாசனைகளும்