பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 சத்திய வெள்ளம்

மாலை நேரம் வந்து வெயில் தணிந்திருந்தது. ஊரிலிருந்து அந்த இடம் சில மைல்கள் தள்ளியிருந்தது. கிணற்றடி மேட்டில் செக்கச் செவேலென்று. மிளகாய்ப்பழ அம்பாரம் குவிந்திருந்தது. தங்கை மாரியம்மாள் தொலைவில் அவனைப் பார்த்ததுமே எதிர்கொண்டு ஓடிவந்தாள். முகம் மலர அவனை வரவேற்றாள்.

“ஏண்டா இப்பிடி இளைச்சுப்போயிச் சோகை தட்டின மாதிரி வெளுத்திருக்கே..?” என்று தாய் அவன் உடம்பைச் சுட்டிக்காட்டி விசாரித்தாள். எவ்வளவு செழிப் பாக இருந்தாலும் ஒவ்வொரு தாய்க்கும் தன் மகளைத் தான் அல்லாத பிறர் பேணிய வேளைகளில் எல்லாமே அவனை இளைக்கச் செய்துவிட்டது போல் தோன்றுவது தவிர்க்க முடியாதது போலிருந்தது. அவனுடைய மதியச் சாப்பாட்டைப் பற்றி உடனே விசாரித்தாள் தாய். வீட்டில் அவளே வைத்து விட்டு வந்திருந்த கம்பங்களியையும் தயிரையும் பிசைந்து சாப்பிட்டதைச் சொன்னான் அவன். சன்னாசித்தேவர் மகள் தன்னைச் சாப்பிடக் கூப்பிட் டதையும் தன்னிடம் அளவு கடந்து வெட்கப் பட்டதையும் கூட அவன் தாயிடம் சிரித்துக் கொண்டே தெரிவித்தாள்.

“வயசு வந்த பொண்ணு வெட்கப்படாம என்ன செய் யும்? நீ மட்டும் என்னவாம்? இன்னும் சின்னப் பைய னின்னா நினைச்சுக்கிட்டிருக்கே? உனக்கு என்ன வயசு இப்ப கல்யாணங் கட்டிக்கிட்டிருந்தா இதுக்குள்ளார.”

அவன் தாய் இப்படி எல்லாம் தாராளமாக அவனி டம் பேசுவது உண்டு. நல்ல வேளையாக அப்போது சற்றே விலகித் தொலைவில் மிளகாய் பறித்துக் கொண்டிருந்த அவன் தந்தை சுப்பையாத்தேவர் ஒரு கோணிப் பையோடு அவனருகே வந்து, “இந்தா நீயும் ஒரு சால் பிரித்துக் கொண்டு மொளகா எடு, நேரமாகுது. பொழுது சாயறதுக் குள்ளே முடியணும்.” என்று கோணிப்பையை அவன் கையில் கொடுத்தார்.