பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 273

“ஊரிலே இருந்து இப்பத்தான் வந்திருக்கான். உடனே அவனெ உங்க வெள்ளாமைக் காரியத்துக்கு வேலை ஏவுறீங்களே..?” என்று தேவரைக் கண்டித்தாள் பாண்டி யனின் தாய்.

தேவர் அதை பொருட்படுத்தவில்லை. அவர் சுபாவமே அப்படித்தான். வியக்கவும், உபசரக்கவும், சம்பிரதாயமாக வரவேற்கவும் தெரியாத முரட்டு உழைப்பாளி அவர். உரமேறிய சரியான கரிசற்காட்டு விவசாயியான அவர் காலேஜில் படிக்கிற மகனை வந்தியா? செளக்கியமா? என்றுகூட விசாரிக்காமல் உடனே சால் பிரித்துக் கொடுத்து மிளகாய் எடுக்கச் சொல்லியது அவர் மனைவிக்குக் கோப மூட்டியது. பாண்டியனோ ஆத்தாளின் கோபத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டே தந்தை சொல்லியபடி சால் பிரித்துக் கொண்டு மிளகாய் எடுக்கத் தொடங்கினான்.

இருபத்திரண்டாவது அத்தியாயம்

கிராமத்தில் நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்தன. ஒவ் வொரு நாளும் ஒரு வாரத்தின் சுமையோடும், கனத் தோடும் முக்கி முனகிக் கொண்டு மெதுவாக ஊர்வது போல் இருந்தது. வேறுவேறு கல்லூரிகளிலிருந்து விடு முறைக்காக ஊர் வந்திருந்த மாணவர்களோடு சேர்ந்த ஒரு நாள் இரவு சைக்கிள் சவாரி செய்து விருதுநகருக்குப் போய் இரவு இரண்டாவது காட்சி திரைப்படம் பார்த்து விட்டு வந்தான் பாண்டியன். வாடகை சைக்கிள்களை எடுத்துக் கொண்டு ஏழெட்டுப் பேர் சேர்ந்து போய் விட்டுச் சிரித்துப் பேசிக் கொண்டே இரவில் சேர்ந்து திரும்பியது உற்சாகமான அநுபவமாக இருந்தது. பல் கலைக் கழக மாணவர் பேரவை தேர்தலை ஒட்டி நடந்தி ருந்த நிகழ்ச்சிகளும், சிறை சென்று மீண்டதும் பல பத்திரி கைகளில் பேர் குறிப்பிட்டு வந்திருந்த காரணத்தால் எங்கே படிக்கிற மாணவர்களாயிருந்தாலும் மாணவர்களி டையே அவனுக்கு ஒரு மதிப்பையும், புகழையும் உண்டாக்

ச.வெ-18