பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 சத்திய வெள்ளம்

கியிருந்தன. பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தேர் தலில் அவன் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிச் சார்புடைய மாணவர்களை எதிர்த்து வென்றிருந்தானோ, அந்தக் கட்சிச் சார்புடையவர்களாக இருந்த ஒரிருவர் அவனை வெறுக்கவும் செய்தனர். ஆனால், அந்த வெறுப்பு மிக மிகச் சிறுபான்மையாகவே இருந்தது. அழகமுத்துவைப் போல் இன்னும் அடுக்கு மொழிப் பேச்சு யுகத்திலேயே பின்தங்கி இருந்த ஒரிருவர் அப்படி வெறுத்தாலும் ஒரு பெரிய பலைக் கழகப் பேரவையின் செயலாளனாயிற்றே என்று அவனை நோக்கி வியக்கும் வியப்பையும் அந்த ஒரிரு வரால்கூடத் தவிர்க்க முடியவில்லை. மல்லிகைப் பந்தலில் இருந்தாலும், மதுரைக்கு வந்தாலும், பாலவநத்தத்துக்குள் நுழைந்தாலும் மாணவர் இயக்கத்தில் ஈடுபட்டதன் காரணமாகத் தனக்கு ஏற்பட்டிருக்கும் புதிய மதிப்பையும், பெருமையையும் பாண்டியனே உணர முடிந்தது; புரிந்து கொள்ள முடிந்தது. அவன் கிராமத்துக்கு வந்த இரண் டாம் நாளோ, மூன்றாம் நாளோ அருப்புக் கோட்டையி லிருந்த உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ஒருவர் பள்ளி இலக்கிய மன்ற விழாவுக்காக அவனைப் பேச வருமாறு கூறிவிட்டார்.

“வேறே யாராவது பெரிய தலைவராப் பார்த்துக் கூப்பிடுங்க. நான் எதுக்கு?” என்று பாண்டியன் பணிவாக மறுத்தான்.

“உபசார வார்த்தையா நீ இப்படிப் பேசக்கூடாது தம்பி! இனிமே உன்னைப்போல இருக்கிற இளைஞர்கள் தான் தலைவர்களாக வரணும். வயசானவங்க எல்லாம் போரடிக்கிறாங்க. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டிருக்காங்க என்ன பேசறோம்னு தங்களுக் கும் புரியாமே கேட்கிறவங்களுக்கும் புரியாமே மணிக் கணக்காப் பேசறாங்க..” என்று பதில் சொல்லிச் சிரித்தார் அந்தத் தலைமை ஆசிரியர். பாண்டியன் அவர் கூறியதை அப்படியே ஒப்புக் கொள்ளவில்லை.