பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சத்திய வெள்ளம்

யாக ஆட்சி மாறியது. ஆனால் மாறிய ஆட்சி மிகச் சில மாதங்களிலேயே மாணவர்களின் அதிருப்தியைக் சம்பாதித்துக் கொண்டது. பொருளாதாரத் திட்டங்கள் எதுவும் இல்லாமல் வெறும் உணர்ச்சியை மட்டும் பரவச் செய்து தங்களை ஏமாற்றி விட்டார்களோ என்ற சந்தேகம் இளைஞர்கள் உள்ளத்தில்வேரூன்றியது. அதன் விளைவாக மொழிப் போராட்டத்தை ஆதரித்த இளைஞர்களே அந்தப் போராட்டத்தின் தலைவர்கள் ஆளும் ஆட்சியை முழு மூச்சோடு எதிர்க்க நேரிட்டது.

இந்தக் காலக்கட்டத்தில்தான் பாண்டியன் மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழகத்தில் மாணவனாகச் சேர்ந்தி ருந்தான். அந்தப் பல்கலைக் கழகத்தில் சேரும் போது அவன் இவற்றையெல்லாம் அறியாத ஒரு நாட்டுப் புறத்து மாணவனாகத்தான் சேர்ந்திருந்தான். இரண்டாண்டுப் படிப்பும் தன்னை ஒத்த தேசிய நல நோக்கம் கொண்ட மாணவர்கள் பலரைச் சந்திக்க நேர்ந்ததும், அண்ணாச்சி யின் நட்பும் அவனைப் பெரிதும் வளர்ச்சி அடையச் செய்திருந்தன. அவனும் சக மாணவர்களும் அந்த இரண்டாண்டில் அவ்வப்போது நடத்திய உரிமைப் போர்கள் எல்லாம் வெற்றியடைந்திருந்தன. போராட்டங் களும், பிரச்னைகளும் ஒருபுறம் இருந்தாலும் படிப்பைக் கோட்டை விடாமல் கவனித்துக் கொண்டான் அவன்.

‘முதல் ஆண்டு எப்படியிருந்தாலும் டிகிரி எக்ஸ்ாமி னேஷனுக்கு முந்திய ஆண்டிலிருந்தே பொதுக் காரியங் களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்’ என்ற முடிவோடு தான் அந்த ஆண்டு ஊரிலிருந்து புறப்பட்டு வந்தான் பாண்டியன். ஆனால் அது பலிக்காமல் போயிற்று. அவனை மாணவர் பேரவைச் செயலாளன் ஆக்குவதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தன.

பிற்பகல் மூன்று மணிக்கு மேலாகியிருந்தது. அறை யில் உடன் தங்கும் மாணவன் பொன்னையா, சுதந்திர தின விடுமுறையையும் அடுத்து வந்த சனி, ஞாயிறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/28&oldid=609448" இலிருந்து மீள்விக்கப்பட்டது