பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 சத்திய வெள்ளம்

இந்தக் கவிதையை இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பப் படித்தான் பாண்டியன். அவனுடைய இதயத் தின் குரல்களையெல்லாம் எதிரொலிப்பது போலிருந்தது இது. பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் பிறகு இந்த நவநீத கவி தமிழ்நாட்டில் ஒரு பெரிய உணர்ச்சி வாயிலைத் திறந்து விட்டிருப்பது போல் தோன்றியது அவனுக்கு. அந்தக் கரிசல் காடு முழுவதும் எதிரொலிக்கும் படி இந்தச் சொற்களை உரத்த குரலில் கூவவேண்டும் போலிருந்தது. ‘சாலை விதிகளைச் சரியாகப் புரிந்துகொள்-சாலைகளில் நடுவே நிற்கக்கூடாது’ என்று கூறியுள்ள வரிகளின் மூலம் ‘மிடில் ஆஃப் தி ரோட் என்னும் வழவழா மனப்பான்மை மிக மிக நாசூக்காகக் கிண்டல் செய்யப்பட்டிருக்கும் நயத்தை அவன் எண்ணி எண்ணி இரசித்தான்.

அன்றிரவு ஊர்ச் சாவடியில் வேறு சில மாணவர் களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது பாண்டி யன் இந்த வசன கவிதையை அவர்களிடம் எடுத்துச் சொல்லிப் புகழ்ந்தான். எல்லாரும் அவனைப் போலவே அதை இரசித்தாலும் விருதுநகரில் படிக்கும் அழகுமுத்து மட்டும் அதைக் கிண்டல் செய்து விமரிசித்தான்.

“எதுகை இல்லை. மோனை இல்லை. அடி வரம்பு, சீர் வரம்பு எதுவுமே இல்லாமல் இது எப்படிக் கவிதை யாகும்?”

“எதுகை, மோனை, சீரு, தளை, அடி எல்லாம் சரியா யிருந்து உள்ளே சரக்கு எதுவுமில்லாமே நடைப்பினம் போல் வர்ர கவிதைகளை என்னான்னு சொல்றது? எங்கே நீதான் ஒரு நல்ல கவிதையைச் சொல்லேன் அழகமுத்து?” என்று அவனோடு விவாதிக்கத் தொடங்கினான் மற்றொரு { {❍TöᏈöröJöᏈT.

“சொல்றேன் கேளு. நானே சென்ற ஆண்டு எங்க கல்லூரி மேகஸின்லே எழுதிய கவிதையைக் கேட்டால் நீங்க அத்தினி பேரும் அசந்து போயிடுவீங்க” என்று தொடங்கினான் அழகுமுத்து. .