பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 281

மாலையில் விருதுநகர் போய்த் திருவனந்த புரத்திலிருந்து சென்னை செல்லும் மெயிலில் மதுரை போய்ச் சேர்ந்தான் அவன். முதலில் மணவாளன் வீட்டுக்குச் சென்று பார்த்த போது அவர் வீட்டில் இல்லை. இரவு ஒன்பது மணிக்குத் தான் அவரைப் பார்க்க முடியும் என்று தெரிந்தது. அதற்குள் சித்திரக்காரத் தெருவுக்குப் போய்க் கண்ணுக் கினியாளைச் சந்தித்துவிட்டுத் திரும்ப எண்ணி டவுன் ஹால் ரோடு வழியே போய்க் கொண்டிருக்கும்போது ஒரு படக்கடை வாயிலிலே எதிர்பாராத விதமாகத் தமிழ்த் துறைத் தலைவர் டாக்டர் பொழில் வளவனாரையும், வார்டன் பண்புச் செழியனையும் பாண்டியன் சந்திக்க நேர்ந்தது. அப்போதுதான் ஃபிரேம் செய்யப்பட்ட அமைச்சர் கரியமாணிக்கத்தின் மிகப் பெரிய படம் ஒன்றை இருவரும் சுமக்க முடியாமல் தூக்கிச் சுமந்து ஒரு டாக்ஸியில் வைத்துக் கொண்டிருந்தார்கள். மிக அருகே பார்த்துவிட்டதனால், “ஐயா வணக்கம். எப்ப வந்தீங்க?” என்று தமிழ்த்துறைத் தலைவரை வணங்கினான் பாண்டியன். திடீரென்று பாண்டியனை அங்கே சந்திக்க நேர்ந்ததை எதிர்பார்க்காத அவர்கள் முகத்தில் அசடு வழியச் சிரித்தார்கள்.

“அமைச்சரின் உருவப் படத்தைப் பட்டமளிப்பு விழா முடிந்த மறுநாளே தமிழ் டிபார்ட்மெண்ட் அறையிலே திறந்து வைக்கப்போகிறோம். இந்தப் படத்துக்காகத் தான் வந்தோம்” என்று அவன் கேட்காமலே வந்த காரியத் தையும் சொன்னார் பொழில் வளவனார்.

அதற்கு எந்த மறுமொழியும் கூறாமல் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான் பாண்டியன். பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையைச் சேர்ந்த கூடத்தில் திரு.வி.க., மறைமலையடிகள், தமிழத் தாத்தா உ.வே.சா, பரிதிமாற் கலைஞர் போன்றவர்களின் படங்களும், பாரதியார், பாரதிதாசன் போன்றவர்களின் படங்களுமே இதுவரை இருந்தன. இப்போது புது வழக்கமான ஒர் அமைச்சரின் படத்தைத் திறப்பதற்காக இவர்கள் ஏன் இப்படி