பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 287

“எங்கேம்மா நாயினா இல்லியா?” என்று அவளிட மிருந்து காப்பியை வாங்கிக் கொண்டே விசாரித்தார் மணவாளன். நாயினாவும் அம்மாவும் ஆடி வீதிக்குக் கதை கேட்கப் போயிருப்பதாகச் சொன்னாள் அவள்,

“நீ தனியாகத்தான் இருக்கியா? அதான்.” என்று ஏதோ சொல்லத் தொடங்கிய மணவாளன், பாண்டி யனைப் பார்த்து மெல்லச் சிரித்துக் கொண்டே மேலே பேசாமல் அப்படியே நிறுத்திவிட்டார்.

“பட்டமளிப்பு விழாவப்ப ஒரு பெரிய போராட்டம் நடத்தப் போகிறோம். யூனிவர்ஸிடியிலே படிக்கிற எல்லாப் பிரிவு மாணவர்களோட ஆதரவும் வேணும். உன்னாலே நிறையக் காரியம் ஆகவேண்டியிருக்கும்மா. நீ மனசு வைத்தால் முடியும்” என்றார் மணவாளன்.

“அண்ணனைப் போல் மாணவர் தலைவர்கள் இப்படி வேண்டக் கூடாது! உரிமையோடு எங்களுக்குக் கட்டளை இடவேண்டும்” என்றாள் அவள். மிகவும் தன்னடக்கமாக அவள் இப்படிப் பதில் பேசியது மணவாளனுக்கும் பாண்டியனுக்கும் பிடித்திருந்தது.

“இந்தப் பட்டமளிப்பு விழாப் போராட்டம் முடிந்ததும் அகில இந்தியத் தேசிய மாணவர் சம்மேளனத்தின் சார்பில் பல்கலைக்கழக மாணவர்களின் மகாநாடு ஒன்றையும் மல்லிகைப் பந்தலில் நடத்தப் போகிறோம்.

“பிரமாதமா நடத்தலாம். மாணவிகளின் ஒத்துழைப்பு முழு அளவில் இருக்கும்.”

“நிதி வசூலுக்கு இரண்டு நாடகங்களாவது போட வேண்டியிருக்கும். செலவு நிறைய ஆகும்.”

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பின் பாண்டி யனையும் உடனழைத்துக் கொண்டு மணவாளன் புறப்பட் டார். இருவரையும் இரவு ஒன்பது ஒன்பதரை மணிக்குள் அங்கே சாப்பிட வருமாறு அழைத்தாள் அவள்.

“நாங்கள் நாலைந்து கல்லூரி விடுதிகளுக்குப் போய் மாணவர்களைச் சந்தித்துப் பேச வேண்டியிருக்கிறது.