பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 - சத்திய வெள்ளம்

போய் நிற்க வேண்டாம். நீயே ஒரு ‘கன் ஸ்ட்ரக்ஷ ன் கம்பெனின்னு போர்டு மாட்டிக்கிட்டு இங்கேயே உட்காருங்கிறாங்க வீட்டிலே, பம்பாய் போகலேன்னா ஒரு வாரத்துக்கு முன்னாடியே அங்க வந்திடலாம். எதுக்கும் நான் உனக்குக் கடிதம் எழுதறேன் பாண்டியன்!” என்றார் மணவாளன். பொழில்வளவனாரையும் பண்புச் செழியனை யும் படக்கடை வாயிலில் பார்த்ததைப் பற்றி மணவாள னிடம் சொன்னான் பாண்டியன்.

“அவங்க ரெண்டு பேருமாச் சேர்ந்து மல்லிகைப் பந்தலிலேயே ஒரு பெரிய படக் கடையாக வச்சு நடத்த லாம். ஏன்னா வருசம் முந்நூத்தி அறுபது நாளும் அவங்க எந்த மந்திரி படத்துக்காவது பிரேம் போட்டுத் திறப்பு விழா நடத்திக்கிட்டுத்தான் இருக்காங்க. சொந்தப் படக்கடைதான் அதுக்குத் தோதாக இருக்கும்!”

“அண்ணனை ஒரு சந்தேகம் கேட்கணும்! அது என்ன பொழில்வளவனாருன்னுகூட ஒரு பேரா இருக்க முடியும்? அவரு சொந்தப் பேரு என்னண்ணே ?”

“சோலைராஜான்னு பேரு அதைப் பொழில்வளவன்னு தமிழாக்கி வச்சுக்கிட்டிருக்காரு. பண்புச் செழியனோட பேரு இராஜகோபாலன்கிறது. அவரும் கெஸட் நோட்டி ஃபிகேஷனோட பேரை மாத்திக்கிட்டாரு...”

“ஏன் இப்படியெல்லாம் மாத்திக்கிறாங்க அண்னே? இதுலே என்ன ஒரு மேனியா வோ தெரியலியே..?”

“இந்த மாதிரி மேனியாவுக்கு எல்லாம் இங்கே ஒரு பெரிய சரித்திரமே இருக்குப் பாண்டியன்! பிரிட்டீஸ் காரனுக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும் பிறந்த திருட்டுக் குழந்தைகள் நம்மிடையே பல இயக்கங்களாக உருவாயின. அதில் ஒன்று தான் காரணமில்லாத பிறமொழி வெறுப்பு. தாய்மொழிமேல் பற்றோ ஞானமோ சிறிதும் இல்லா தவர்கள்கூட இந்தப் பிறமொழி வெறுப்பை வளர்த்துக் கொண்டாட முற்பட்ட காலம் ஒன்று இருந்தது. அதே காலத் தில் சமூகத்தில் உயர் வகுப்பார் என்று கருதப்பட்ட சிலர்