பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 291

தாய்மொழியை ஒரளவுகூட லட்சியம் செய்யாதிருக்கவே இந்தக் குறுகிய உணர்வு வளரவும் விளம்பரம் பெறவும் முடிந்தது. அந்தக் காலத்தின் பிரதிநிதிகள்தான் பொழில் வளவனாரும், பண்புச் செழியனும், இவர்களுக்கு உண்மை யான மொழிப்பற்றும் இல்லை. தமிழ் மட்டுமே தெரிந்தவர் கள்களிடம் ஆங்கிலத்தில் பேசி மிரட்டுவதும், ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்களிடம் கடுந்தமிழ் பேசி மிரட்டுவது மாக இவர்களிடம் ஒரு தந்திரம் நிரந்தரமாக உண்டு. அதனால் தமிழறியாதவர்களும் இவர்களைக் கண்டு பயந்து ஒதுங்குவார்கள். ஆங்கிலம் அறியாதவர்களும் மிரண்டு ஒதுங்கி விடுவார்கள். தொடர்ந்து மணவாளன் பாண்டியனுக்கு வரலாற்று ரீதியாகத் தமிழ்நாட்டு அரசியல் இயக்கங்களைப் பற்றிய சில உண்மைகளை விளக்கினார். அந்த இயக்கங்களின் கடைசி வெற்றி 19676) அவர்களால் அறுவடை செய்யப்பட்டதையும் காரண காரியங்களோடு விவரித்தார் அவர், இன்னோர் உண்மை யையும் அவர் கூறத் தயங்கவில்லை. “நாடளாவிய பெருங் குறைகளையும், தேச விடுதலையையும் பற்றியே கவலைப் பட்ட மாபெரும் தேசபக்தர்கள் மொழி இலக்கியத் துறை களைப் பற்றிய பிரதேச உணர்வுகளை மறந்ததால் அந்த மறதிக்கு ஒரு சிறிய இடைக்காலத் தோல்வியையே தண்டனையாகப் பெற நேர்ந்துவிட்டது! அந்தக் கொடுமை யைத்தான் இப்போது நீயும் நானும் அனுபவிக்கிறோம். கிணற்றுத் தவளை மனப்பான்மை குறையக் குறையத்தான் இதிலிருந்து இனிமேல் நாம் விடுபட முடியும்.”

“கிணற்றுத் தவளை மனப்பான்மைகளே சில தத்துவங் களாகி, அந்தந்தத் தத்துவங்களே இங்கே சில கட்சிகளா கவும் வளர்ந்து விட்ட பின் இனி அது எப்படி உடனே சாத்தியமாகும் அண்னே?”

“சாத்தியமாகிறாற் போல் நாம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது பாண்டியன்! அதற்குத்தான் நாம் இடைவிடாமல் போராடி வருகிறோம். இனி அடுத்த தலைமுறை தெளிவாக இருக்கும். நிஜம் வெள்ளமாகப்